டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத மேலும் 70 பேருக்கு அனுமதி
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வு எழுத மேலும் 70 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் துணை கலெக்டர் போன்ற பதவிகளுக்கு 178 பேரை தேர்ந்தெடுக்க அறிவிப்பை வெளியிட்டது. கடந்த டிசம்பர் மாதம் 16 மற்றும் 26-ந் தேதிகளில் ஆரம்ப கட்ட தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் கேள்வி- விடைகளின் குறைபாடுகளால் தங்களுக்கு மார்க்குகள் குறைவாக கிடைத்துள்ளன என்று 32 பேர் ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
குறிப்பிட்ட கேள்வி - விடைகளை நிபுணர்களை அனுப்பி வைத்து எங்கள் விடைத்தாள்களை மறுப்பீடு செய்ய வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி பால்வசந்தகுமார் விசாரணை செய்து 32 பேரையும் நிபந்தனைகள் அடிப்படையில் தேர்வு எழுத அனுமதித்தார்.
இதே அடிப்படையில் மேலும் 70 பேர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி பி.ஜோதிமணி விசாரணை செய்து நேற்று உத்தரவை பிறப்பித்தார்.
அதில், வரும் 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் நடக்க இருக்கும் பிரதான தேர்வில் 70 பேரையும் எழுத அனுமதிக்க வேண்டும். இவர்கள் தங்களுக்குரிய ஹால்டிக்கெட்டுகளை வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தில் பெற்றுக் கொள்ள வேண்டும். இந்த தேர்வு எழுத அனுமதித்ததை அங்கீகாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
இந்த பிரதான தேர்வில் இவர்கள் எழுதிய விடைத்தாளை தனியாக சீலிட்ட கவரில் வைத்திருக்க வேண்டும்.
ஏற்கனவே நடந்த ஆரம்ப கட்ட தேர்வில் எந்தெந்த கேள்வி மற்றும் விடைகளில் குறைபாடுகள் உள்ளது என்பதை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதலை தேர்வாணையம் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் வழங்கிய கேள்வி விடைகளை தேர்வாணையம் நிபுணர் குழுவிடம் சமர்ப்பித்து ஆராய வேண்டும்.
இவ்வாறு ஆராய்ந்த பிறகு இவர்கள் சரியான பதில் அளித்திருந்தால் அவற்றிற்கு மார்க் வழங்க வேண்டும். இவர்களது ஆரம்ப கட்ட தேர்வின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்த பிறகு போதிய கட்-ஆப் மார்க் எடுத்திருந்தால் மட்டுமே இவர்கள் எழுதிய பிரதான தேர்வு பேப்பரை திருத்தலாம். இவர்கள் உரிய நேரத்தில் ஹால்டிக்கெட் பெறா விட்டாலோ, இவர்கள் கூறும் குறைபாடு உள்ள கேள்வி - விடைகளை சமர்ப்பிக்க தவறினாலோ உரிமை கோர முடியாது என்று கூறியிருந்தார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications