தமிழக அரசின் சிறப்பு தலைமை செயலராக ஸ்ரீபதி நியமனம்
சென்னை: தமிழக அரசின் சிறப்பு தலைமை செயலராக கே.எஸ் ஸ்ரீபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமைச் செயலாளர் பதவிக்கு இணையாக சிறப்பு தலைமைச் செயலாளர் என்ற புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது. இப்பதவியில் தற்போது மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஸ்ரீபதி நியமிக்கப்பட்டுள்ளார்.
3 மாதங்களுக்கு அவர் இப்பதவியில் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலாளர் செய்து வரும் அனைத்துப் பணிகளையும் இவர் கவனிப்பார்.
இந்த மாதத்துடன் தலைமைச்செயலாளர் எல்.கே. திரிபாதி ஓய்வு பெறுகிறார். இன்று முதல் தலைமைச் செயலாளர் பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் அவருடன் ஸ்ரீபதியும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது நாள் வரை தலைமைச் செயலாளர் திரிபாதிக்கு அனுப்பப்பட்டு வந்த அனைத்து கோப்புகளும், இனிமேல் ஸ்ரீபதி மூலமாக அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் தலைமை செயலர், கண்காணிப்பு ஆணையர், நிர்வாக சீரமைப்பு ஆணையர் ஆகிய பதவிகளை வகித்தவர் ஸ்ரீபதி. புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பதவியுடன் ஏற்கனவே வகித்து வந்த பொறுப்புகளிலும் ஸ்ரீபதி தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீபதி கூறுகையில், அரசு திட்டங்களை ஒருங்கிணைத்து முறையாக நடைமுறை படுத்துவதே என்னுடைய நோக்கம். அரசு எந்த திட்டத்தை முன்னுரிமை அளித்து நிறைவேற்ற விரும்புகிறதோ, அதன் அடிப்படையில் என்னுடைய செயல்பாடுகள் இருக்கும் என்று கூறினார்.
முன்னாள் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் உபாத்யாயாவுடன், ஜெயலலிதா வழக்கு தொடர்பாக எல்.கே.திரிபாதி பேசியதன் டேப் வெளியாகி சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திரிபாதிக்கு இணையாக ஸ்ரீபதியை தமிழக அரசு நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications