பெரும் பரபரப்புக்கு மத்தியில் அமர்நாத் சர்ச்சை முடிந்தது

Subscribe to Oneindia Tamil

ஜம்மு: பரபரப்பு, சர்ச்ைசகளுக்கு மத்தியில் 2 மாத கால அமர்நாத் யாத்திரை நேற்றுடன் முடிவுக்கு வந்தது.

கடல் மட்டத்தில் இருந்து 3,800 அடி உயரத்தில் அமைந்துள்ளது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ளது அமர்நாத் குகை கோயில். இங்கு ஆண்டு தோறும் ஜூன் மாதம் இயற்கையாகவே தோன்றுகிறது பனி லிங்கம். நாடு முழுவதிலும் இருந்து லட்சக் கணக்கான பக்தர்கள் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய வருகின்றனர்.

இந்தாண்டு அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 17ம் தேதி தொடங்கியது. முதல் மூன்று நாட்களில் மட்டும் 3 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்தனர். இந்நிலையில் அமர்நாத் கோயிலுக்கு நூறு ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு வழங்கியது. இதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால், நிலம் திரும்பப் பெறப்பட்டது. இதனால் அங்கு கடந்த 40 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து கலவரம் நடந்து வருகிறது.

இதனால் பரபரப்பு, பதைபதைப்பு, சர்ச்ைசகளுக்கு மத்தியில் நடந்து வந்த அமர்நாத் யாத்திரை நேற்றுடன் முடிந்தது. யாத்திரையின் கடைசிக் குழு நேற்று காலை 9 மணிக்கு பனி லிங்கத்தை தரிசனம் செய்தது. சிறப்பு பூஜைகளுடன் இந்தாண்டு யாத்திரை முடிவுக்கு வந்தது.

இந்தாண்டு 5.50 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு 4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். தற்போது இது 5 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்த ஆண்டு யாத்திரையின்போது 68 பக்தர்கள் பல்வேறு காரணங்களால் மரணமடைந்தனர். இவர்களில் ஒரு போலீஸ்காரர் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் ஆகியோரும் அடக்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+