புதுவை முதல்வர் பதவி தமிழருக்கே: நகைமுகன்
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுச்சேரி மாநிலம் யூனியன் பிரதேசமாக இருந்தாலும் இது தமிழர் பூமி. எனவே இதன் முதல்வராக தமிழர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என தனி தமிழர் சேனையின் தலைவர் நகைமுகன் கூறியுள்ளார்.
இதுகுறித்து புதுச்சேரியில் நகைமுகன் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழரான ரங்கசாமியை முதல்வர் பதவியிலிருந்து அகற்ற முயல்வது கண்டனத்துக்குரியது.
தமிழகத்தின் பகுதியாக புதுவை இல்லாவிட்டாலும் கூட இதுவும் தமிழர் பூமிதான். புதுச்சேரி, மாஹே, ஏனாம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய யூனியன் பிரதேசமாக இருப்பதால் மட்டும் ஒரு மலையாளியோ அல்லது தெலுங்கரோ முதல்வர் பதவிக்கு ஆசைப்பட முடியாது.
ரங்கசாமியை நீக்கினால், அவருக்குப் பதில் இன்னொரு தமிழர்தான் முதல்வர் பதவியில் நியமிக்கப்பட வேண்டும் என்றார் நகைமுகன்.












Click it and Unblock the Notifications