பின்கோடு முறை ரத்தாகிறது-அறிமுகமாகிறது 'பேல்'!
டெல்லி: தற்போது நடைமுறையில் உள்ள பின்கோடு (Postal Index Code) எண் முறையை ரத்து செய்து விட்டு 'பேல்' எனப்படும் (Postal Address Locator) புதிய முறைக்கு மாற தபால்துறை முடிவு செய்துள்ளது.
இந்தியாவில் தபால் நிலையங்களை அடையாளம் காட்டும் வகையில் தற்போது பின்கோடு எண்கள் பயன்படுத்தப்படுகின்றன. அதன்படி 6 இலக்க எண்களில் முதல் எண் இந்தியாவில் உள்ள மண்டலம், அடுத்து உள்ள எண் துணை மண்டலத்தையும், அதைத் தொடர்ந்து உள்ள எண் அந்த மண்டலத்தில் உள்ள மாவட்டத்தையும், அதற்கு அடுத்துள்ள 3 எண்கள் அங்குள்ள தபால் நிலையங்களையும் குறிக்கும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
1972ம் ஆண்டு இந்தியாவில் பின்கோடு முறை அமலுக்கு வந்தது. அந்த எண்கள்தான் இன்று வரை நடைமுறையில் உள்ளது. இந்த பின்கோட்டை வைத்து இந்தியாவை 8 மண்டலமாக தபால்துறை பிரித்துள்ளது.
முதல் மண்டலத்தில் (1 என்ற எண்ணில் ஆரம்பிக்கும்) டெல்லி, ஹரியாணா, பஞ்சாப், இமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர், சண்டிகர் ஆகியவை அடங்கும்.
2வது மண்டலத்தில் உ.பி. உத்தரகாண்ட் ஆகியவையும், 3வது மண்டலத்தில் ராஜஸ்தான், குஜராத், டையூ, டாமன் ஆகியவையும், 4வது மண்டலத்தில் சட்டீஸ்கர், மகாராஷ்டிரா, ம.பி, கோவா ஆகியவையும், 5வது மண்டலத்தில் கர்நாடகா, ஆந்திராவும், 6வது மண்டலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, லட்சத்தீவுகளும், 7வது மண்டலத்தில் மேற்கு வங்கம், அஸ்ஸாம், சிக்கிம், அருணாச்சல் பிரதேசம், ஒரிசா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா, அந்தமான் நிக்கோபார், மேகாலயா ஆகியவையும், 8வது மண்டலத்தில் பீகார் மற்றும் ஜார்க்கண்ட்டும் அடங்கும்.
பின்கோடு முறையில் உள்ள சில சிரமங்களை மனதில் கொண்டு தற்போது அந்த எண்ணுக்குப் பதில் பேல் எனப்படும் போஸ்டல் அட்ரஸ் லொகேட்டார் எனப்படும் புதிய முறைக்கு மாற தபால்துறை முடிவு செய்துள்ளது.
இந்த புதிய முறையில், கிராமம், நகரம், இடம், கட்டடம், தெரு, சாலை என அனைத்துக்கும் கோட் எண் தரப்படும். எனவே ஒருவரது முகவரியை வெகு எளிதில் அடையாளம் காண முடியும். மேலும் பேல் எண்ணை வைத்து ஒருவரின் முகவரியையும் எளிதில் கண்டுபிடித்து விட முடியும்.
தபால்காரர்களுக்கு இது மிகவும் எளிதாக இருக்கும் என்பதால் இந்த பேல் முறைக்கு இன்னும் ஓரிரு மாதங்களில் தபால்துறை மாறவுள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications