புலிகளின் பயிற்சி தளத்தை கைப்பற்றியது ராணுவம்?
கொழும்பு: புலிகளின் முக்கிய பயிற்சி தளம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாகவும் இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயகாரா கூறியதாவது: புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்குப் பகுதியில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே கடும் மோதல் நடந்து வருகிறது. வெளிஓயா பகுதியில் நேற்று முன்தினம் நடந்த சண்டையில் 27 புலிகள் கொல்லப்பட்டனர்.
அனந்தன் குளம் என்ற இடத்தில் புலிகளின் முக்கிய பயிற்சி தளம் உள்ளது. இதை ராணுவ வீரர்கள் தீவிர போராட்டத்திற்கு பிறகு கைப்பற்றியுள்ளனர். எதிர் தாக்குதலில் ஈடுபட்ட புலிகள் சிறிது நேரத்தில் அந்த இடத்தை விட்டு தப்பியோடினர்.
இந்த பயிற்சித் தளத்தில் நூறு பதுங்கு குழிகள், நான்கு கருத்தரங்கு கூடங்கள், கிணறுகள், கழிவறைகள், கல்லறை ஆகியவை உள்ளன. அந்த கல்லறையில் 67 புலிகளின் உடல்கள் புதைக்கப்பட்டுள்ளது. வெளி ஓயா பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.
ஆனால், இந்தத் தகவல்களை புலிகள் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications