சேவை: வழக்கறிஞர்களுக்கு வீரமணி வேண்டுகோள்
மதுரை: பணத்திற்காக உழைக்காமல் இனத்திற்காக உழைக்க வேண்டும் என்று வழக்கறிஞர்களுக்கு திராவிடக் கழக தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரையில் நடந்த வழக்கறிஞர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது
நமது கழக வழக்கறிஞர்களுக்கும், மற்ற வழக்கறிஞர்களுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. நாம் சமூக மாற்றத்திற்காகப் பாடுபடக் கூடியவர்கள். அதிலும், சமூகநீதிக் கண்ணோட்டத்துடன், பணத்திற்காக மட்டுமல்லாது, இனத்திற்காகவும் பாடுபடவேண்டும். சேவை மனப்பான்மையுடன் செயலாற்ற வேண்டும்.
மற்றவர்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, சமுதாயப் பணியாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட வேண்டும். நாம் அவசிய குறிக்கோளுக்காகப் போராட வேண்டும். ஆனால், இன்று மற்ற வழக்கறிஞர்கள் தேவையில்லாதவற்றிற்கு எல்லாம் போராடுகிறார்கள்.
நவம்பர் 28ம் தேதி அகில இந்திய அளவில், சமூகநீதிக்கான வழக்கறிஞர்கள் கூட்டத்தை, திராவிடர் கழக வழக்கறிஞர் அணியும் இணைந்து சென்னையில் நடத்த வேண்டும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications