சோம்பேறி பேச்சு-மீனாட்சி சுந்தரத்திற்கு ஆசிரியர்கள் கண்டனம்
திருச்சி: தொடக்க மற்றும் ஆரம்ப பள்ளிகளில் செயல்வழி கற்றல் முறையை எதிர்க்கும் ஆசிரியர்களை சோம்பேறிகள் என்று கூறியதற்கு தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச் செயலாளர் க.மீனாட்சி சுந்தரத்திற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் மாவட்ட தலைவர் ஆல்பர்ட் தாஸ் தலைமையில் நடைபெற்றது. செயற்கு குழு கூட்டத்தில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
செயல்வழி கற்றல் முறையை உடனே நிறுத்த வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. அதே போன்று இந்த திட்டத்திற்கு மாணவர்களின் பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஏபிஎல் முறையில் ஆசிரியர் பாடக்குறிப்பு எழுத வேண்டியதில்லை. தேர்வுகள் எழுதவோ, விடைத்தாள்கள் திருத்தவோ, மாணவர்களின் கல்வித் திறன் குறித்து ரேங்க் கார்டு கொடுக்கவோ தேவையில்லை. மேலும் கரும்பலகையை அதிகம் பயன்படுத்தாமல் நின்று கொண்டே பாடம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. இதல் ஆசிரியர்களுக்கு வேலைப்பளுவும் அதிகம் இல்லை.
சோம்பேறிகளான மீனாட்சி சுந்தரம் போன்ற ஆசிரியர்களே இந்த திட்டத்தை விரும்புவர். ஆனால் கடினமாக உழைக்கும் ஆசிரியர்கள் இந்த திட்டத்தின் மூலம் மாணவர்கள் வருகை மேலும் குறைந்து விடுவதோடு கல்வித்தரமும் பாதிக்கும் என்று கவலைப்படுகின்றனர்.
இந்த நிலையில் ஆசிரியர்களை சோம்பேறிகள் என்று கூறிய மீனாட்சி சுந்தரத்தை வன்மையாக கண்டிகிறோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications