குடிநீர்: சிங்கம்புணரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்
சென்னை: சிவகங்கை-ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் சிங்கம்புணரி பகுதிகளையும் சேர்க்க வலியுறுத்தி அதிமுக சார்பில் சிங்கம்புணரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.
இதுகுறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் தொகுதியில் உள்ள வீடுகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் ஆகியவற்றிற்கான சொத்து வரியை பேரூராட்சி நிர்வாகம் பன்மடங்கு உயர்த்தியுள்ளது.
ஏற்கனவே கடும் குடிநீர் தட்டுப்பாடு, மின் வெட்டு போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்கள் மீது மேலும் நிதிச்சுமையை திணிப்பது கண்டனத்துக்குரியதாகும். இதனால் அங்குள்ள ஏழை, நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
சிங்கம்புணரி பேரூராட்சியிலும இதே நிலைதான். இதற்கு நிரந்தரத் தீர்வு காண திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
காவேரியில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நகரங்கள் மற்றும் குடியிருப்புகள் பயன் பெறும் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சிங்கம்புணரி பேரூராட்சி, மரிதிப்பட்டி, எஸ்.வி. மங்கலம், காலாப் பூர், சிவபுரிபட்டி, முறையூர், சூரக்குடி, கண்ணமங்கலம் பட்டி மற்றும் வகுத்தெளுந்துவன்பட்டி ஆகிய ஊராட்சிப் பகுதிகளை சேர்க்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர்.
மக்களின் கோரிக்கைபடி இந்த பகுதிகளை குடிநீர் திட்டத்தில் சேர்க்க வலியுறுத்தியும், சொத்து வரியை உயர்த்தியுள்ள சிங்கம்புணரி பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும் நாளை சிங்கம்புணரி பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கழக அமைப்புச் செயலாளர் எஸ்.கோகுல இந்திரா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்று கூறியுள்ளார்.
-
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications