டீசல் தட்டுப்பாடு-விசைப்படகு மீனவர்கள் ஸ்டிரைக்
தூத்துக்குடி: டீசல் தட்டுபாட்டை கண்டித்து தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று திடீரென்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் பல கோடி ரூபாய் வருவாய் இழுப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் 260 விசைப்படகுகள் உள்ளன. மீன்வளத்துறை மூலமாக மானிய விலையில் 90,000 லிட்டர் டீசல் வழங்கப்படுகிறது. வெளி பங்க்குகள் மூலமாக 20,000 லிட்டர் டீசல் கிடைக்கிறது.
கடந்த சில தினங்களாக நிலவி வரும் டீசல் தட்டுப்பாடு காரணமாக மீன்வளத் துறை வழங்கி வரும் டீசல் அளவு குறைத்து வழங்கப்படுகிறது. வெளியிடங்களிலும் போதுமான அளவுக்கு டீசல் கிடைப்பதில்லை. இதனால் மீன்பிடி படகுகள் கரையிலேயே முடங்கின. கடலுக்கு செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.
இதையடுத்து, டீசல் தட்டுபாட்டை கண்டித்தும், போதிய அளவு டீசல் வழங்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியும் தூத்துக்குடி மீன்பிடி துறைமுக விசைப்படகு மீனவர்கள் நேற்று ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர். இதனால் 260 விசைப்படகுகளும் கரையில் நிறுத்தப்பட்டிருந்தன.
இதுகுறித்து விசைப்படகு சங்க செயலாளர் சேவியர் தாஸ் கூறுகையில், குறைவான டீசலை வைத்துக் கொண்டு கடலுக்கு எப்படி போக முடியும். சீசன் தொடங்கியுள்ளது. இப்போதுதான் நிறைய மீன் பிடிக்க முடியும். வருமானமும் கிடைக்கும். இந்த நிலையில் ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாட்டால் தொழில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
கோடி கணக்கில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அரசு உடனே இதில் தலையிட்டு ஆவன செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்துவோம் என்று கூறினார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கையில் கத்தி.. பெட்ரோல் பங்க் ஊழியர்களை கொலைவெறியோடு தாக்கிய கும்பல்.. தூத்துக்குடியில் பயங்கரம்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications