என்.எஸ்.ஜி உறுப்பினர்களிடம் இந்தியா விளக்கம்

இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதற்கான முதல் படியாக சமீபத்தில் சர்வதேச அணு சக்தி ஏஜென்சியில், இந்தியாவின் பாதுகாப்பு வரைவு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து அடுத்த கட்டம் அரங்கேறவுள்ளது. இந்தியாவின் அணு வர்த்தகத்திற்கு அனுமதி அளிப்பது, இந்தியா கோரியுள்ள சலுகைகள் குறித்து பரிசீலிப்பது ஆகிய முக்கிய முடிவுகளை அணுப் பொருள் சப்ளை குழுமம் எனப்படும் என்.எஸ்.ஜி. இன்று எடுக்கவுள்ளது.
இதையடுத்து என்.எஸ்.ஜி.நாடுகளிடம் இந்தியா கடைசி நிமிட ஆதரவு வேட்டையில் தீவிரப்படுத்தியது. ஸ்திரியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இந்தியா கோரியுள்ள நிபந்தனையற்ற சலுகைகள் குறித்து ஆட்சேபனை தெரிவித்து வருகின்றன. என்.பி.டி எனப்படும் அணு ஆயுத ஒழிப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகைகள் அளிப்பது சரியாக இருக்காது என இவை கருதுகின்றன.
இருப்பினும் இவர்களையும் ஆதரவுப் பட்டியலில் சேர்க்க இந்தியா மும்முரமாக உள்ளது. மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன் என்.எஸ்.ஜி. குழுமத்தின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் ஜெர்மனி மற்றும் மற்ற இரு முக்கிய நாடுகளிடம் இந்தியாவின் கோரிக்கை குறித்து விளக்கியுள்ளார்.
என்.எஸ்.ஜி. கூட்டத்தையொட்டி மேனன் நேற்று வியன்னா வந்து சேர்ந்தார். அவர் தலைமையிலான இந்திய குழுவில் அணு சக்தி மேம்பாட்டுத்துறை இயக்குநர் ரவி குரோவரும் இடம் பெற்றுள்ளார்.
இவர்கள் ட்ரோக்கியா என அழைக்கப்படும் முக்கிய நாடுகளான ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஹங்கேரி ஆகிய நாடுகளின் பிரதிநிதிகளுடன் பேசினர்.
ஜெர்மனியின் முன் முயற்சியால் இந்தக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா சுய அணு ஆயுத கட்டுப்பாட்டை கடைப்பிடித்து வருவதால் இந்தியாவுக்கு நிபந்தனையற்ற சலுகையைத் தர ஜெர்மனி ஆதரவு தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் ஆதரவாக இருப்பதால் சிக்கலின்றி என்.எஸ்.ஜி.யில் இந்தியாவின் கோரிக்ைககளுக்கு ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் என்.எஸ்.ஜி.உறுப்பினர்களுடன் மேனனன் தலைமையிலான இந்தியக் குழு சிறப்பு சந்திப்பை நடத்தியது.
அப்போது, அணு ஆயுத விவகாரத்தில் இந்தியா நடந்து கொண்டு வரும் விதம், அது கடைப்பிடித்து வரும் சுய கட்டுப்பாடு உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.
இந்தியாவுக்கு சலுகைகள் அளிக்கப்பட்டால் அது எந்த வகையிலும், உலகளாவிய அணு ஆயுதமற்ற சூழ்நிலையை பாதிக்காது என்றும் இந்தியா விளக்கியது.
மேலும், அணு எரிபொருளையோ அல்லது தொழில்நுட்பத்தையோ இந்தியா எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்வதில்ைல என்பதையும் இந்தியக் குழு தெளிவுபடுத்தியது.
இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கடந்த இரண்டு மாதங்களில் என்.எஸ்.ஜி.உறுப்பினர்களிடம் இந்தியா விளக்கம் அளிப்பது இது 2வது முறையாகும். கடந்த ஜூலை 18ம் தேதி மேனன் என்.எஸ்.ஜி. உறுப்பினர்களிடம் இதுகுறித்து விளக்கினார் என்பது நினைவிருக்கலாம்.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications