விமானப் படையில் 400 பைலட்கள் பற்றாக்குறை
டெல்லி: இந்திய விமானப் படையில் 400 விமானிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த இடங்களை நிரப்ப 5 ஆண்டுகளாகும் என்றும் விமானப் படை தளபதி பாலி ஹோமி மேஜர் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், விமானப் படை விமானியாக 6 முதல் 8 ஆண்டு பயிற்சி தேவை. அதன் பிறகே அந்த விமானியை முழுமையாக பயன்படுத்த முடியும்.
இப்போது விமானப் படையில் 400 விமானிகள் பற்றாக்குறை நிலை உள்ளது. இந்த இடங்களை நிரப்ப அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பணிக் காலம் முடிந்தவர்களை தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்வது, விமானப் படையில் பணியாற்றுவதற்கு ஆர்வத்தை ஏற்படுத்துவது ஆகிய நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
தனியார் துறையில் பணியாற்றும் விமானிகளுக்கு இணையாக, விமானப் படை விமானிகளுக்கு ஊதியம் இல்லை. எனவே ஊதியத்தை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சமீப காலமாக ஆண்டுதோறும் சராசரியாக 160 அதிகாரிகள் விமானப் படையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்றுச் செல்வதால் (விஆர்எஸ்) காலியிடங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும் விமானப் படையில் கூடுதலாக 70 ஏர் மார்ஷல் பணியிடங்கள் உருவாக்கப்படும். தற்போது, 22 ஏர்மார்ஷல் பணியிடங்கள் மட்டுமே உள்ளன.
அதே போல தற்போதுள்ள 47 ஏர் வைஸ்-மார்ஷல் பணியிடங்களுடன், மேலும் 32 பணியிடங்கள் உருவாக்கப்படும்.
தற்போதுள்ள, 131 ஏர்கமாடோர் பணியிடங்களுடன் கூடுதலாக 158 இடங்கள் ஏற்படுத்தப்படும்.
நான் விமானப் படையில் 41 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். இந்தக் கால கட்டத்தில் நான்கு முறை மட்டுமே தேர்தல்களில் வாக்களித்துள்ளேன். பாதுகாப்புப் படையினருக்கு அவர்கள் பணியாற்றும் இடத்திலேயே வாக்களிக்கும் உரிமையை தர வேண்டும் என தொடர்ச்சியாக வந்த பல அரசுகளிடம் கோரிக்கை விடுத்தும் எந்தப் பலனும் இல்லை.
அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்னராவது எங்களின் கோரிக்கை நிறைவேறும் என நம்புகிறேன்.
மறைமுக ஓட்டு முறை 2003ம் ஆண்டு செப்டம்பரில் அமலுக்கு வந்தது. இதன்மூலம் ராணுவத்தில் பணியாற்றுவோரின் ஓட்டுக்களை அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் போட அதிகாரம் வழங்கலாம். இருந்தாலும் இந்த முறை பற்றி வீரர்களில் பெரும்பாலானவர்களுக்கு தெரியவில்லை.
அதனால் தேர்தல் நேரத்தில் வீரர்கள் எங்கு பணியில் இருக்கின்றனரோ, அங்கு அவர்கள் தங்களின் ஓட்டுக்களைப் பதிவு செய்ய அனுமதிக்க வேண்டும் என்றார்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications