பூச்சி: பெப்ஸிக்கு ரூ.50000 அபராதம்
செங்கல்பட்டு: குளிர்பானப் பாட்டிலில் ஈக்கள், எறும்புகள் இறந்து கிடந்ததால் ரூ.50,000 அபராதம் செலுத்த பெப்ஸி நிறுவனத்திற்கு செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்போரூர் அடுத்த சிறுங்குன்றம் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சாமுவேல். கடந்த ஆண்டு ஜூன் மாதம், முள்ளிப்பாக்கம் கூட்ரோடில் தியாகராஜன் என்பவரின் கடையில் பெப்சி நிறுவன தயாரிப்பான மிராண்டா குளிர்பானம் 5 பாட்டில்களை வாங்கினார்.
அதில் ஒரு பாட்டிலில் ஈக்கள் மற்றும் எறும்புகள் இறந்து கிடந்தன. இது குறித்து அவர் கடைக்காரரிடம் கேட்டதற்கு, அவர் திருப்போரூர் ஸ்ரீஐயப்பா ஏஜென்சீஸிடம் குளிர்பானங்களை வாங்கியதாக கூறினார். இதையடுத்து குளிர்பானத்திற்கான தொகையை செலுத்தி பில் வாங்கினார் சாமுவேல்.
இதுகுறித்து விளக்கம் கேட்டு பெப்ஸி நிறுவனத்துக்கு கடிதம் எழுதினார். பெப்ஸி நிறுவனம் பதில் அளிக்காததால் ரூ.10 லட்சம் இழப்பீடு கேட்டு செங்கல்பட்டு நுகர்வோர் நீதிமன்றத்தில் சாமுவேல் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம் விசாரணைக்கு ஆஜராகும்படி கடைக்காரர், வினியோகஸ்தர் மற்றும் பெப்சி நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் யாரும் ஆஜராகவில்லை, பதிலும் அளிக்கவில்லை.
அவகாசம் அளித்தும் எதிர்த்தரப்பினர் அலட்சியப்படுத்தியதால் மனுதாரர் சமர்ப்பித்த ஆவணங்கள் அடிப்படையில் ஒரு தரப்பாக தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்பில், குளிர்பானப் பாட்டில்கள் சீலிடப்பட்டு விற்கப்படுவதால், சில்லறைக் கடைக்காரர் அதற்கு பொறுப்பல்ல, அதை கடைகளுக்கு வழங்கும் வினியோகஸ்தரும் பொறுப்பல்ல.
குளிர்பானங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் மட்டுமே பொறுப்பு. எனவே குளிர் பானம் அருந்துபவர்களுக்கு உடல் நலக்கேட்டை ஏற்படுத்தும் விதத்தில் தயாரித்த பெப்ஸி நிறுவனம், மனுதாரருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications