ஆன்லைன் வர்த்தகம்: ரூ.68 லட்சம் மோசடி, போலீஸ் வலை
திண்டுக்கல்: ஆன்லைன் வர்த்தகத்தில் ரூ.68 லட்சம் மோசடி செய்த நபரை திண்டுக்கல் போலீஸார் தேடி வருகின்றனர்.
திண்டுக்கல் ஜி.எஸ். நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவர் இன்டர்நெட்டில் போலி முகவரி கொடுத்து ஆன் லைனில் வர்த்தகம் செய்து வந்தார். அதற்கு மளிகை பொருட்கள் தேவைப்படுவதாக விளம்பரம் செய்தார்.
இந்த விளம்பரத்தை நம்பிய பெங்களூரூ சுதாகரன், ஆந்திரா குரு பிரகாஷ், புதுச்சேரி கேசவன், ஐதராபாத் நாகராஜன், விருதுநகர் சங்கர ராமகிருஷ்ணன், சேலம் சுப்பிரமணி, பிரகாஷ் ஆகிய 7 வியாபாரிகளும் பொருட்களை சப்ளை செய்தனர்.
ரூ.68 லட்சம் மதிப்புள்ள அரிசி, புளி, மஞ்சள், பாலிதின் பை சப்ளை செய்துள்ளனர். சரக்குகளை பெற்றுக்கொண்ட சீனிவாசன், ஒரு வாரத்திற்குள் பணம் தருவதாக கூறியுள்ளார்.
ஆனால் பணத்தை தராமல் இழுத்தடித்து வந்துள்ளார். இதனால் அவர் மீது வியாபாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் குற்றப்பிரிவு போலீசாரிடம் அவர்கள் புகார் அளித்தனர். இதையறிந்த சீனிவாசன் தலைமறைவானார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து சீனிவாசனை தேடி வருகின்றனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications