வன்முறை கட்சியாவிட்டது தேமுதிக-ராஜேந்தர்
சென்னை: டி.ராஜேந்தரின் லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொதுக் கூட்டத்தின் மீது தேமுதிகவினர் பெட்ரோல் குண்டு வீசித் தாக்கினர். இதற்கு டி.ராஜேந்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நிருபர்களிடம் டி.ஆர். கூறியதாவது:
காஞ்சீபுரத்தில் நடைபெற்ற லட்சிய திராவிட முன்னேற்றக்கழக பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி சில கருத்துக்களை தெரிவித்தேன். அரசியல் என்று வந்து விட்டால் விமர்சனங்களை தாங்க வேண்டும்.
மாற்றுக் கட்சியினர் சொல்லும் கருத்துக்களை காது கொடுத்து கேட்க வேண்டும். உங்களை நான் விமர்சிக்கிறேன் என்றால், என்னையும் விமர்சித்து விட்டு போங்கள். அதை விட்டு வன்முறைக்கு வழிவகுக்க கூடாது.
கருத்தோடு கருத்தை மோத விடுங்கள். அதை விட்டு விட்டு வன்முறை செயல்களில் இறங்க கூடாது.
தேமுதிகவினர் முன்பு நெல்லையிலும், திருப்பூரிலும் என் பேனரை கிழித்தார்கள். நான் பொறுத்துக்கொண்டேன். அரியலூரில் புகுந்து மின்விளக்குகளை உடைத்தார்கள். அதையும் நான் சகித்துக் கொண்டேன். இப்போது அண்ணா பிறந்த மண்ணில், என்னுடைய கட்சி பொதுக்கூட்டத்தில் தேமுதிகவினர் பெட்ரோல் குண்டை வீசியிருக்கிறார்கள். கடவுள் அருளால் நான் பிழைத்துக்கொண்டேன்.
இதற்காக நான் பாதுகாப்பு கேட்க போவதில்லை. வழக்கும் தொடர போவதில்லை. இந்த சம்பவம் தொடர்பாக ஒரு தேமுதிக தொண்டரை மட்டும் தான் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். மற்றவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்.
தேமுதிக வன்முறை கட்சியாகி விட்டது. இந்த சம்பவம் பற்றி விஜயகாந்த் இதுவரையில் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை ஏன்?. இது போன்ற சம்பவம் மேலும் நடக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறாரா? அவர் கட்சியினருக்கு தெரிந்தது எல்லாம் தீவிரவாதம் தான்.
வெடிகுண்டு வீசிப்பார்ப்பதால், நான் கூட்டத்தில் பேசுவதை குறைத்துக் கொள்ளப் போவதில்லை. சலசலப்புக்கு நான் அஞ்சப்போவதில்லை. இப்பொழுது ஒலிப்பதை விட இன்னும் என் குரல் அதிகமாக ஒலிக்கும்.
ராமேஸ்வரத்தில் நின்று கொண்டு வார்த்தைகளில் நிதானம் இல்லாமல் திமுகவினரை சுட வேண்டாமா? என்று பேசியிருக்கிறார். பின்பு அதை மறுத்து இருக்கிறார். இதை ஒரு வார இதழ் ஆதாரத்துடன் வெளியிட்டு இருக்கிறது. அதை சுட்டிக்காட்டி தான் நான் பேசினேன். அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா பற்றி அவர் தகாதவார்த்தையால் கேள்வி கேட்கிறார்.
மற்றவரை விமர்சனம் செய்வது அவருடைய உரிமை என்றால், இவரை விமர்சனம் செய்ய மற்றவர்களுக்கு உரிமை இல்லையா?
ஒரேயொரு சட்டமன்ற தொகுதியில் மட்டும் தேமுதிக ஜெயித்து இருக்கும் நிலையில், இப்போதே இந்தளவுக்கு வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றால், நாளை.. நிச்சயம் அரசியலில் வரமாட்டார்கள்... ஒருவேளை வந்து விட்டால் நாடு தாங்குமா? என்றார் டி.ராஜேந்தர்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications