அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைப்பேன்: சிரஞ்சீவி
ஹைதராபாத்: அரசியலில் மிக மிக நிதானமாக நடந்து கொள்வேன். எந்தத் தவறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வேன் என்று மெகா ஸ்டார் சிரஞ்சீவி கூறியுள்ளார்.
அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள சிரஞ்சீவி தனது திரையுலக நண்பர்களுக்கு விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஒவ்வொரு அடியையும் நான் கவனமாக எடுத்து வைப்பேன். எனது நடவடிக்கைகளில் எந்தத் தவறும் வராமல் பார்த்துக் கொள்வேன்.
என்னால் திரையுலகம் பெருமைப்படும் வகையில் நடந்து கொள்வேன். எனக்கு இத்தனை காலம் ஒத்துழைப்பு வழங்கிய திரையுலக நண்பர்களுக்கு எனது நன்றிகள். எனது இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரையும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.
ஒரே நேரத்தில் இரு படகுகளில் சவாரி செய்ய நான் விரும்பவில்லை. திரையுலகுக்கு குட்பை சொல்ல வேண்டிய நேரம் வந்து விட்டது. இருப்பினும் அதை ஏற்றுக் கொள்ளும் அளவுக்கு எனது மனம் இன்னும் கல்லாக மறுக்கிறது என்றார் சிரஞ்சீவி.
சிரஞ்சீவி அளித்த இந்த விருந்தில் மோகன் பாபு, நாகார்ஜூன், பவன்கல்யாண், நாக பாபு, அல்லு அஏரவிந்த், அல்லு அர்ஜூன், ராம் சரம் தேஜ், ரவி தேஜா, ஸ்ரீகாந்த், பிரம்மானந்தம், அஸ்வினி தத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
30 வருட கால திரையுலக வாழ்க்கையில், 148 படங்களில் சிரஞ்சீவி நடித்துள்ளார். 3 இந்திப் படங்கள், 2 கன்னடப் படங்கள், ராணுவ வீரன், 47 நாட்கள் உள்ளிட்ட சில தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications