மது கோடா ராஜினாமா - ஆட்சி அமைக்க சோரன் மும்முரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுயேச்சை எம்.எல்.ஏவான மது கோடா தலைமையில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி அரசு பதவியில் இருந்து வந்தது.
இந்த நிலையில் லோக்சபாவில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததற்கு பரிசாக ஜார்க்கண்ட் முதல்வர் பதவியை தனக்கு வழங்க வேண்டும் என்று சிபு சோரன் நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். மேலும் மது கோடா அரசுக்கு அளித்து வந்த ஆதரவையும் அவர் விலக்கிக் கொண்டார்.
இதையடுத்து 25ம் தேதி மது கோடா அரசு தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என ஆளுநர் சையத்சிப்தி ரஸி உத்தரவிட்டார். அதை மது கோடாவும் ஏற்றார்.
இந்த நிைலயில் நேற்று தனது பதவியை கோடா ராஜினாமா செய்தார். டெல்லி சென்றிருந்த கோடா நேற்று பிற்பகல் ராஞ்சி திரும்பினார் பின்னர் சுயேச்சை எம்.எல்.ஏக்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பின்னர் ராஜ் பவனுக்கு சென்று ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவருடன் சுயேச்சை எம்.எல்.ஏக்களான துணை முதல்வர் ஸ்டீபன் மராண்டி, ஜோபா மஜ்ஹி, வந்தரா பிரகாஷ் செளத்ரி, பானு பிரதாப் சாஹி, ஹரிநாராயண் ராய் ஆகியோரும் சென்றனர். அனைவருமே அமைச்சர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கோடா அரசு ராஜினாமா செய்துவிட்டதைத் தொடர்ந்து சிபு சோரன் ஆட்சி அமைக்க மும்முரமாகியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் தனிப் பெரும் கட்சியாக பாஜக (26 எம்.எல்.ஏக்கள்) விளங்குகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 9எம்.எல்.ஏக்களும், சிபு சோரனுக்கு 17 எம்.எல்.ஏக்களும் உள்ளனர். ராஷ்டிரிய ஜனதாதளத்தசற்கு 7 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications