சிங்கூர் டாடா தொழிற்சாலைக்கு பலத்த பாதுகாப்பு

Subscribe to Oneindia Tamil

Mamta Banerjee
சிங்கூர் (மேற்கு வங்கம்): மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில் உள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் நானோ கார் தயாரிப்பு தொழிற்சாலைப் பகுதியில் காலவரையற்ற தர்ணா போராட்டத்தை மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் அறிவித்துள்ளதால், அங்கு பெருமளவிலான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நானோ தொழிற்சாலை உள்ள பகுதியைச் சுற்றிலும் 200க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நானோ கார் தொழிற்சாலை நுழைவாயிலில் போலீஸார் துப்பாக்கியுடன் நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் கண்காணிப்புக் கோபுரங்களும் அமைக்கப்பட்டு அங்கும் போலீஸார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

கலவரம் ஏற்பட்டால் தண்ணீரைப் பீய்ச்சியடிக்கும் வாகனங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இன்று மாலை டாடா மோட்டார்ஸ் நிறுவன நுழைவாயில் முன்பு மம்தா பானர்ஜி பேசப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், சமாஜ்வாடி கட்சித் தலைவர் அமர்சிங்கும் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டுள்ளது.

தர்ணாப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்த வேண்டும் என முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா கோரிக்கை விடுத்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+