விமானங்களை போலவே ரயில்களில் பணி பெண்கள்
டெல்லி: விமானங்களைப் போலவே ரயில்களிலும் பணிப் பெண்களை (ஹோஸ்டஸ்கள்) நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல் கட்டமாக வரும் செப்டம்பர் முதல் சில குறிப்பிட்ட ரயில்களில் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் இந்த சேவை தொடங்கவுள்ளது.
இவர்களுக்கு யூனிபார்மும் முடிவு செய்யப்பட்டுவிட்டது. நேவி ப்ளூ பேண்ட்ஸ், வெள்ளை நிற சட்டை, பிளேசர்கள் அணிந்து பணியாற்றுவார்கள்.
இந்த முயற்சி வெற்றி பெற்றால் இரண்டாம் வகுப்பு, 3ம் வகுப்பு ஏசி பெட்டிகள், முதல் வகுப்பு ஆகியவற்றிலும் ஹோஸ்டஸ்கள் நியமிக்கப்படுவார்கள்.
செப்டம்பர் 26ம் தேதி முதல் கன்சன் கன்யா எக்ஸ்பிரஸ், வடக்கு பெங்கால் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களின் முதல் வகுப்பு ஏசி பெட்டிகளில் பணிப்பெண்கள் சேவை தொடங்கவுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி-சியால்தா சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ், குவஹாத்தி-டெல்லி சம்பர்கிராந்தி எக்ஸ்பிரஸ் ஆகியவற்றிலும் பணிப் பெண்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
தனியார் நிறுவனங்களின் உதவியோடு இந்த சேவை தொடங்கப்படவுள்ளது. பணிப் பெண்களை தனியார் நிறுவனங்களே நியமிக்கவுள்ளன.
ஒரு பெட்டியில் 3 பணிப் பெண்கள் இருப்பர். உணவு, தண்ணீர் ஆகியவற்றை பறிமாறுவர். பெட்டிகளை சுத்தம் செய்யவும் சில ஊழியர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
பணிப்பெண்கள் உள்ள பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் இதற்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications