இலங்கையில் கடும் மோதல்-12 புலிகள் பலி
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கையில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே நேற்று நடந்த கடும் சண்டையில் 12 புலிகள் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயகாரா கூறியதாவது
கிளிநொச்சிப் பகுதியில் ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையே நேற்று கடும் சண்டை நடந்தது. இதில் புலிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 13 வீரர்கள் காயமடைந்தனர்.
வவினியா, வெளியோயா மற்றும் முல்லைத்தீவு பகுதிகளில் நடந்த சண்டையில் 8 புலிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர் என்று கூறினார். நேற்று முன் தினம் நடந்த சண்டையில் 30 புலிகள் கொல்லப்பட்டனர்.
புலிகளின் அரசியல் தலைநகரமான கிளிநொச்சிக்கு அருகில் உள்ள 2 முக்கிய நகரங்களை ராணுவம் கைப்பற்றியுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications