தமிழகத்தில் 9வது நாளாக தொடர்ந்து டீசல் தட்டுப்பாடு

தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்தப் பிரச்சனையைத் தீர்க்க பெட்ரோலிய நிறுவனங்கள் முழு அளவில் முயற்சி எடுக்கவில்லை. இதனால் பல பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுவிட்டன.
இதையடுத்து நிலைமை குறித்து விவாதிக்கவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யவும் தமிழ்நாடு பெட்ரோல், டீசல் டீலர்கள் சங்கத்தின் பொதுக் குழு இன்று கூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து சங்கத்தின் தலைவர் கண்ணன் கூறுகையி்ல்,
கடந்த 9 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குறிப்பாக சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்கள் தான் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
திருச்சி, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டாலும் அங்கு பிரச்சனை சரி செய்யப்பட்டு விடுகிறது.
ஆனால், மற்ற மாவட்டங்களில் நிலைமை மிக மோசமாக உள்ளது. இந்த தட்டுப்பாடு காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான பெட்ரோல் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயில் நிறுவனங்கள் பெட்ரோல் நிலையங்களுக்கு தேவையான அளவு பெட்ரோல், டீசல் வழங்குவது இல்லை.
மின்சார தட்டுப்பாடு காரணமாக கம்ப்யூட்டர் நிறுவனங்கள் ஜெனரேட்டர் மூலமாக இயக்கப்படுவதினால் அதிக அளவு டீசல் தேவைப்படுகிறது என்று தலைமை செயலாளர் கூறியிருக்கிறார். லாரிகளுக்கு மட்டுமல்லாமல், கம்ப்யூட்டர் நிறுவனங்களுக்கும் டீசல் தட்டுப்பாடு இல்லாமல் ஆயில் நிறுவனங்கள் வழங்க வேண்டும்.
பெட்ரோல் நிலைய உரிமையாளர்களிடம் 48 மணி நேரத்திற்கு முன்பே பணம் கொடுக்க வேண்டும் என்றும், அப்போது தான் தேவையான பெட்ரோல், டீசல் தர முடியும் என்றும் புதிய நிபந்தனையை ஆயில் நிறுவனங்கள் விதித்துள்ளன. இதனால், பெட்ரோல் டீலர்கள் பொருளாதாரரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பிரச்சனை குறித்து விவாதிப்பதற்காக பெட்ரோல் டீலர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சேலம் ஐந்து ரோட்டில் உள்ள கே.எம்.பி. திருமண மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பெட்ரோல் டீலர்கள் பிரச்சினை குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் தேவையான அளவு பெட்ரோல், டீசல் வழங்காமல் மிகக்குறைந்த அளவில் வழங்கி வரும் ஆயில் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படு்ம் என்றார்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்!












Click it and Unblock the Notifications