தம்பியை கத்தியால் குத்தி கொன்ற அண்ணன்
சென்னை: வேலைக்குப் போகாததை கண்டித்ததால் ஆத்திரம் அடைந்து தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்த அண்ணனை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருச்சி மாவட்டம் லால்குடி வட்டத்தில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் தமிழ்ச் செல்வன் (30), மணிகண்டன் (25), விஜி (21). சென்னை அடுத்த மணலி புது நகர் வெள்ளிவாயல் என்ற இடத்தில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர்.
இவர்களில் மணிகண்டன் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் இருந்தார். இதை அவரது தம்பி விஜி கண்டித்து வந்தார். இதனால் சகோதரர்களிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அடிக்கடி சண்டை நடந்து வந்தது.
இந்நிலையில் நேற்று அவர்களிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் காய்கறி நறுக்கும் கத்தியால் விஜியின் இடது புற மார்பில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் விஜி மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன் அங்கிருந்து தப்பியோடினார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் விஜியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜி வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து மணலி புதுநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மணிகண்டனை தேடி வருகிறார்கள். மூத்த சகோதரர் தமிழ்ச்செல்வனை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications