நாளை சிபு சோரன் முதல்வராக பதவியேற்பு
ராஞ்சி: ஜார்கண்டில் ஆட்சி அமைக்க சிபு சோனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அம்மாநில ஆளுநர். இதையடுத்து நாளை அவர் முதல்வராகப் பதவியேற்கிறார்.
வரும் 1ம் தேதி பெரும்பான்மையை நிரூபிக்க அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவு கரம் நீட்டிய ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாக் கட்சி தலைவர் சிபு சோரன், பிரதி உபகாரமாக ஜார்கண்டில் முதல்வர் பதவியை கோரினார். இதையடுத்து அம்மாநில முதல்வர் மதுகோடாவை விலகிக் கொள்ளும்படி காங்கிரஸ் கேட்டுக் கொண்டது.
இதற்கு மறுத்த மதுகோடாவை எதிர்த்து, அவருக்கு அளித்த வந்த ஆதரவை, 17 எம்எல்ஏக்களை கொண்ட சிபுசோரன் கட்சி திரும்ப பெற்றது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து கூட்டணி ஆட்சி நடத்தி வந்த சுயேச்சை எம்எல்ஏ மதுகோடா முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் களம் இறங்கினார் சோரன். ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மத்திய ரயில்வே அமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், சோரனுக்கு ஆதரவு அளிக்க மாட்டேன் என்று கூறிவந்த மதுகோடாவை நேற்று சம்மதிக்க வைத்தார்.
மதுகோடாவைத் தொடர்ந்து, சுயேச்சை எம்எல்ஏவும், முன்னாள் துணை முதல்வருமான ஸ்டீபன் மராண்டியும், சோரனுக்கு ஆதரவளிப்பதாக நேற்று தெரிவித்தார். ஆதரவு கடிதங்களை இருவரும் சோரனிடம் உடனே ஒப்படைத்தனர்.
இதையடுத்து தன்னை ஆதரிக்கும் 42 எம்எல்ஏக்களின் பட்டியலுடன் அம்மாநில ஆளுநர் சையது சிப்தே ரசியை நேற்று மாலை சந்தித்தார் சோரன். பட்டியலை ஒப்படைத்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
இதையடுத்து, சிபு சோரனை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்தார். பெரும்பான்மையை வரும் ஒன்றாம் தேதி நிரூபிக்கும்படி ஆளுநர் உத்தரவிட்டார்.
இதன் மூலம் 82 உறுப்பினர்களை கொண்ட ஜார்கண்ட் மாநில சட்டசபையில் பெரும்பான்மையை பெற்றுள்ள சோரன் நாளை முதல்வராக பதவியேற்கிறார்.
சோரன் ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ள மதுகோடாவுக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 2005ம் ஆண்டு மார்ச் மாதம் ஜார்கண்டில் முதல்வராக பதவியேற்ற சிபு சோரன், சட்டசபையில் பெரும்பான்யை நிரூபிக்க முடியாததால் பதவியேற்ற 9 நாளில் ராஜினாமா செய்தார். இதையடுத்து கடந்த 3 ஆண்டுகளில் இரண்டு முறை ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications