சசி அக்காள் மகளுக்கு 3 ஆண்டு சிறை-கணவர் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு: அபராதம் ரூ. 30 லட்சம்

பாஸ்கரனின் மனைவி சீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் ரூ. 10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலாவின் அக்காள் மகள் சீதளதேவி. இவரது கணவர் எஸ்.ஆர்.பாஸ்கரன் சென்னை ரிசர்வ் வங்கியின் நாணயம் மற்றும் ரூபாய் நோட்டு ஆய்வாளராக பணியாற்றி வந்தார்.
பாஸ்கரனும், மனைவி சீதளதேவியும் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.68 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ்
சிபிஐ, 1997ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தது.
இந்த வழக்கில் 1999ம் ஆண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2000ம் ஆண்டில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 2001ம் ஆண்டில் சிபிஐ சாட்சிகள் விசாரணையை தொடங்கியது. சிபிஐ சார்பில் 56 சாட்சிகள் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக 130 ஆவணங்களும், 3 சான்று பொருட்களும் தாக்கல் செய்யப்பட்டன.
பல ஆண்டுகளாக நடந்து வந்த விசாரணை கடந்த 11ம் தேதி நிறைவடைந்தது. இதையடுத்து சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி நாகநாதன் இன்று தீர்ப்பு வழங்கினார்.
தனது தீர்ப்பில்,
ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ. 20 லட்சம் அபராதமும் விதித்தார். அபராதத் தொகை ரூ.20 லட்சத்தை கட்டத் தவறினால் மேலும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
அதேபோல பாஸ்கரனின் மனைவி சீதளதேவிக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார். இந்த அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 9 மாதங்களுக்கு சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
மேலும் அவர்களிடம் உள்ள 80 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த பாஸ்கரன் மீது கலர் டிவி ஊழலிலும் வழக்கு பதிவானது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications