நளினி வழக்கில் சு.சுவாமி திடீர் ஆஜர்-வக்கீல் மீது புகார்

தன்னை விரைவில் விடுதலை செய்யக் கோரி நளினி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் தன்னையும் இணைக்க வேண்டும் என்று கோரி சுப்ரமணியன் சுவாமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்க உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
இந்த நிலையில், இன்று நளினி மனு நீதிபதி நாகமுத்து முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது திடீரென அங்கு சுப்ரமணியன் சுவாமி ஆஜரானார். பின்னர் அவர் நீதிபதியிடம் கூறுகையில், இந்த வழக்கில் பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு தொடர்பான முழுமையான விவரங்களை நளினியின் வக்கீல் சமர்ப்பிக்கவில்லை. நளினிக்கு மரண தண்டனை விதிக்கும்போது உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்துக்களையும் அவர் உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வரவில்லை.
நளினியின் வக்கீல் பல உண்மைகளை மறைத்து விட்டார் என்றார். அதைக் கேட்ட நீதிபதி, எனக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் அடிப்படையில் நான் உரிய உத்தரவுகளைப் பிறப்பிப்பேன். ஒரு வேளை மனுதாரரின் (நளினி) வக்கீல் உண்மைகளை மறைத்திருந்தால் அது அவர்களுக்குத்தான் பாதகமாக அமையும்.
உங்களுடைய வாதங்களை ஆகஸ்ட் 29ம் தேதி இந்த வழக்கில் விசாரணை தொடங்கும்போது எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் என்றார்.
அதை ஏற்றுக் கொண்ட சுவாமி, ஆகஸ்ட் 29ம் தேதி தனது வாதத்தை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பிப்பதாக தெரிவித்தார்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications