மாணவிக்கு காதல் கடிதம்-ஆசிரியருக்கு உதை
ஈரோடு: பவானியில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிக்கு காதல் கடிதம் கொடுத்த ஆசிரியருக்கு அடி உதை விழுந்தது.
ஈரோடு மாவட்டம், பவானி அரசு பள்ளியில் தாவரவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் திம்மராயன் (32). இதே பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வருபவர் ஜானகி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). திம்மராயன் வகுப்பில் ஜானிகி படித்து வருகிறார்.
இந்நிலையில் மாணவி ஜானகி மீது ஆசிரியர் திம்மராயனுக்கு காதல் பிறந்தது. ஜானகியை அடிக்கடி அழைத்து பேசி வந்துள்ளார். இது, சக மாணவிகள் மூலம் ஜானகியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
இதையடுத்து ஜானகிக்கு மாப்பிள்ளை பார்த்து அவரது பெற்றோர் திருமணம் நிச்சயம் செய்தனர். அடுத்த மாதம் திருமணம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் திம்மராயன் மாணவி ஜானகிக்கு வேறு சில மாணவிகள் மூலம் காதல் கடிதம் கொடுத்து அனுப்பியுள்ளார். செல்போன் மூலமும் ஜானகியிடம் பேசினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த ஜானகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆசிரியர் திம்மராயனை அடித்து உதைத்தனர். இதனால் ஆசிரியர் திம்மராயன் நீண்ட விடுப்பில் தனது சொந்த ஊரான மேச்சேரிக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து பவானி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
15,000 ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு நிறுத்தம்.. தமிழக அரசின் மெத்தனம்.. அப்போ சம்பள உயர்வு கிடையாது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications