அபுதாபி: வெளிநாட்டினருக்கு ஐடி கட்டாயமாகிறது
அபுதாபி: அபுதாபியில் வேலை பார்க்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள் அனைவரும் 2010ம் ஆண்டுக்குள் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பின்னர் அடையாள அட்டை இல்லாதவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என எமிரேட்ஸ் அடையாள அட்டை ஆணையகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஆணையகத்தின் இயக்குநர் தார்விஷ் அகமது அல் சரோனி கூறுகையில், அடையாள அட்டை இல்லாமல் இனி யாரும் அபுதாபியில் தங்க முடியாது. அப்படி இருந்தால் அது சட்டவிரோத தங்கலாக கருதப்படும். அவர்கள் வங்கிக் கணக்குகளை தொடங்க முடியாது. கார்களைப் பதிவு செய்து கொள்ள முடியாது.
அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருப்போரின் குழந்ைதகளுக்கு பள்ளிகளில் அனுமதி தரப்பட மாட்டாது. அடையாள அட்டை இல்லாமல் தங்கியிருக்கும் தொழிலாளர்களை வேலையில் அமர்த்துவோரும் தண்டனைக்குட்படுத்தப்படுவார்கள்.
வருகிற நவம்பர் 1ம்தே தி முதல் அடையாள அட்டைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படும் என்றார்.
இந்தியக் கைதியிடம் சிக்கிய ரூ. 1 லட்சம்:
இதற்கிடையே, குவைத் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்தியக் கைதி ஒருவரிடமிருந்து இந்திய மதிப்பில் ரூ. 1லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வளவு பணம் அவருக்கு எப்படி வந்தது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது சிறையில் சொகுசாக வாழ தன்னுடன் அடைக்கப்பட்டுள்ள சக ஆசிய கைதிகள் சிலர் பணம் கேட்டதாகவும், சிறை வாசத்தை இனிமையானதாக அமைத்துக் கொள்வதற்காக இந்தப் பணத்தை தான் பதுக்கி வைத்திருந்ததாகவும் அவர் கூறியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications
