எல்டிடிஇ விமான தாக்குதல்-திரிகோணலை துறைமுகம் நாசம்!

இலங்கையில் நடந்து வரும் போரின் தீவிரம் உக்கிரமடைந்து வருகிறது. தற்போது கிழக்கை விட்டு விட்டு வடக்கில் ராணுவம் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.
அப்பகுதியில் சில முக்கிய இடங்களையும் ராணுவம் பிடித்ததாக செய்திகள் வந்து கொண்டுள்ளன. இந்த நிலையில் நேற்று இரவு 9.30 மணியளவில் திரிகோணமலை துறைமுகத்தையும், அருகில் உள்ள கடற்படைத் தளத்தையும் குறி வைத்து விடுதலைப் புலிகள் விமான தாக்குதலில் ஈடுபட்டனர்.
துறைமுகத்தில் நின்று கொண்டிருந்த ஜெட்லைனர் என்கிற வீரர்களை ஏற்றிச் செல்லும் கப்பல் மீதும் மற்றும் கடற்படை தளம் மீது அடுத்தடுத்து விமானம் மூலம் புலிகள் தாக்குதல் நடத்தினர்.
இதில் திரிகோணமலை துறைமுகம் பெரும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்கு 2 குண்டுகளை வீசி புலிகள் தாக்குதல் நடத்தினர்.
துறைமுகத்தின் பல பகுதிகள் தீப்பிடித்து எரிந்தன. கடற்படை தளமும் பெரும் சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் தொடர்ந்து குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டு வருவதாக திரிகோணமலை மக்கள் கூறுகிறார்கள். சேதம் பெருமளவில் இருக்கும் எனத் தெரிகிறது.
யாழ்ப்பாணத்துக்கு படையினரை ஏற்றிச்செல்ல பயன்படுத்தப்படும் 'ஜெட்லைனர்' என்ற கப்பலைக் குறி வைத்தும் புலிகள் குண்டு வீசியுள்ளனர். இந்தக் கப்பலில் பெருமளவிலான படை வீரர்கள் ஏற்றப்பட்டு யாழ்ப்பாணம் செல்ல தயாராக இருந்தனர் என்று கூறப்படுகிறது.
திரிகோணமலை கடற்படை தலைமையகம் மற்றம் சீனன்குடா வான்படைத்தளம் ஆகியவற்றிலிருந்து வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளால் விடுதலைப் புலிகளின் விமானம் மீது தாக்குதல் நடப்பட்டது. எனினும் அது தப்பி வன்னி காட்டுக்குள் மறைந்து விட்டது.
தாக்குதல் இடம்பெற்ற நேரம் இருளாக இருந்ததால், விடுதலைப் புலிகளும் இலக்கை சரியாக தாக்க முடியவில்லை. கடற்படையினரும் புலிகளின் விமானங்களைத் தாக்க முடியாமல் போய்விட்டது என்று கூறப்படுகிறது.
இந்த திடீர் தாக்குதலில் 4 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உயிரிழப்பு அதிகமாக இருக்கும் என்று இன்னொரு தகவல் தெரிவிக்கிறது. 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் பலவீனமடைந்திருப்பதாக கூறப்படும் நிலையில் திடீர் விமானத் தாக்குதலில் அவர்கள் ஈடுபட்டிருப்பதை இலங்கை அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. வடக்கில் ராணுவம் மேலும் முன்னேறாமல் தடுக்கும் பொருட்டே விமானத் தாக்குதலில் புலிகள் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தலைநகர் கொழும்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications