பெட்ரோல் பங்குகள் 'விடுமுறை' வாபஸ்-24 மணி நேரமும் இயங்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசின் நடடிக்கையைத் தொடர்ந்து பெட்ரோல் பங்குகளுக்கு வார விடுமுறை என்ற அறிவிப்பை பெட்ரோல் பங்குகள் உரிமையாளர்கள் சங்கம் திரும்பப் பெற்றுள்ளது. 24 மணி நேரமும் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல இயங்கும் என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னையில் டீசலுக்குப் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. மற்ற பகுதிகளிலும் ஓரளவு பெட்ரோல், டீசல் பிரச்சினை இருந்து வருகிறது.

இந்த நிலையில், சேலத்தில் கூடிய தமிழக பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, தினமும் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பங்குகள் திறந்திருக்கும் என அறிவித்தனர்.

தமிழக மக்களை இது பெரும் அதிர்ச்சியிலும், ஆத்திரத்திலும் ஆழ்த்தியது. இதையடுத்து தமிழக அரசு நடவடிக்கையில் இறங்கியது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி, மாநில எண்ணை நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர், பெட்ரோல் விற்பனையாளர் சங்கப் பிரதிநிதிகளை கூட்டி விவாதித்தார்.

அப்போது இத்தகைய கட்டுப்பாடுகள் சட்டவிரோதமானது, எனவே இந்த கட்டுப்பாடுகளை உடனடியாக விலக்கிக் கொண்டு வழக்கம் போல செயல்பட வேண்டும் என தமிழக அரசு எச்சரித்தது.

இதையடுத்து தங்களது முடிவை பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் திரும்பப் பெற்றுள்ளதாக சங்கத்தின் செயலாளர் சந்துரு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த சில மாதங்களாக டீசலின் தேவை அதிகரித்துள்ளதன் காரணமாக போக்குவரத்து மற்றும் தொழில்துறைகளின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், தேவையன அளவு டீசல் இருப்பு வைக்க நடவடிக்ைக எடுக்கப்பட வேண்டும் என 18.82008ல் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சருக்கு தமிழக உணவுத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு கடிதம் அனுப்பினார்.

மேலும் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வரும் 4.2 லட்சம் கிலோ லிட்டர் அளவிலான ஒதுக்கீட்டினை உயர்த்தி கூடுதலாக 75 ஆயிரம் கிலோ லிட்டர் டீசலை ஒதுக்க வேண்டும் என தமிழக முதல்வர், மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு 25.8.2008ல் கடிதம் எழுதியுள்ளார். மாநில அளவில் நிலைமையை உணவுத்துறை அமைச்சரே நேரடியாக தினசரி கண்காணித்து ஆய்வு செய்து வருகிறார்.

இந்த நிலையில் பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் வார விடுமுறை மற்றும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பங்குகள் திறந்திருக்கும் என்ற அறிவிப்பை வெளியிட்னர். இதையடுத்து தலைமைச் செயலாளர் அவர்களை அழைத்துப் பேசினார்.

இந்த அறிவிப்பு சட்டவிரோதமானது, எனவே தொடர்ந்து இயல்பான முறையில் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் இயங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

எண்ணை நிறுவனங்களும் புகார்ளுக்கு இடமளிக்காமலும், பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசல் இருப்பு குறைவு அல்லது இல்லாமை ஏற்படாதவாறு டீசல் விநியோகிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஆகையால் பொதுமக்கள் எந்த அச்சமுமின்றி தேவைக்கு ஏற்ப மட்டுமே டீசல் வாங்கவும், பதற்றத்துடன் தேவையில்லாமல் கூடுதல் இருப்பு வைப்பதை தவிர்க்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+