சூடான் விமான கடத்தல்காரர்கள் சரண்

சூடான் நாட்டின் டார்பர் பகுதியில் உள்ள நியாலா விமான நிலையத்தில் இருந்து தலைநகர் கார்டோமுக்கு கிளம்பிய சன் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 விமானத்தை டார்பர் பகுதியைச் சேர்ந்த சூடான் விடுதலை ராணுவம் என்ற இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் கடத்தினர்.
அந்த விமானத்தில் 95 பயணிகளும், 2 விமானிகளும், 6 விமான சிப்பந்திகளும் இருந்தனர்.
விமானத்தை பிரான்சுக்கு கொண்டு செல்ல உத்தரவிட்டனர். ஆனால், விமானத்தில் எரிபொருள் இல்லை என விமானிகள் கூறவே, அதை எகிப்தில் தரையிறக்க உத்தரவிட்டனர். ஆனால், விமானம் தரையிறங்க எகிப்து அனுமதிக்கவில்லை.
இதையடுத்து லிபியாவில் உள்ள குப்ரா ராணுவ விமான தளத்தில் அந்த விமானம் தரையிறக்கப்பட்டது. தீவிரவாதிகளுடன் லிபிய அரசு நீண்ட நேரம் பேச்சு நடத்தியதையடுத்து 95 பயணிகளையும் விடுவித்தனர். பின்னர் இரு விமான சிப்பந்திகளை விடுவித்தனர்.
ஆனால், 2 விமானிகளையும் 4 சி்ப்பந்திகளையும் தொடர்ந்து பணயக் கைதிகளாய் வைத்துக் கொண்டு விமானத்தை பிரான்சுக்கு கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதை லிபியா ஏற்கவில்லை. இதையடுத்து இன்று இரு தீவிரவாதிகளும் அதிகாரிகளிடம் சரணடைந்தனர். கைது செய்யப்பட்ட அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
விடுவிக்கப்பட்ட பயணிகள் அனைவரும் இன்னொரு விமானம் மூலம் மீண்டும் சூடான் அழைத்துச் செல்லப்படவுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications