சிறுபான்மையினருக்கு தலித் அந்தஸ்து-பாஜக தர்ணா
திருப்பதி: மதம் மாறிய கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லீம்களுக்கும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் அந்தஸ்து தரும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து டெல்லியில் செப்டம்பர் 21ம் தேதி 'மகா தர்ணா' போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்துள்ளது.
இதுகுறித்து திருப்பதியில், பாஜக தலித் மோர்சத்சா தலைவர் பாலகிருஷ்ணா கூறுகையில், ஒரு லட்சம் தலித்கள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
ஆந்திர மாநிலத்திலும் இந்தப் போராட்டம் நடத்தப்படும். இதுகுறித்த பரிந்துரையை மத்திய அரசிடம் வழங்கிய நீதிபதி ரங்கநாத மிஸ்ரா கமிஷன் அறிக்கையை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் செய்யப்படும் என்றார்.
முஸ்லீம்கள்-அரசுக்கு அச்சம்:
இதற்கிடையே அரசும், அதிகாரிகளும் சிறுபான்மையினரை பார்த்து பயப்படுவதாக இந்து முன்னணி தமிழக அமைப்பாளர் முருகானந்தம் கூறியுள்ளார்.
அவர் கூறுகையி்ல், தமிழகத்தில் 25,000க்கு மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
சென்னையில் இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலன், திண்டுக்கல்லில் மாநில செயலாளர் பொன்னையா ஆகியோர் தலைமையில் விநாயகர் ஊர்வலங்கள் நடக்கும்.
கடந்த ஆண்டு நடந்த பாதையில் தான் விநாயகர் சிலை ஊர்வலம் நடக்க வேண்டும், வழியை மாற்றக் கூடாது என அரசே அதிகாரிகளுக்கு குறிப்பு அனுப்பியுள்ளது. இதன்படி அதிகாரிகள் நடக்க வேண்டும்.
இந்து மக்கள் நாம் சொன்னால் கேட்டுக் கொள்வார்கள் என அதிகாரிகள் ம்புகின்றனர். அதே சமயம் முஸ்லிம்களுக்கு சாதகமாக நடந்துகொள்ளாவிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்ட விடுமோ என அதிகாரிகள் பயப்படுகின்றனர்.
திண்டுக்கல் யூசுப்பியா நகர் வழியாக விநாயகர் சிலைகளை கொண்டு செல்வதில் அப்பகுதி மக்கள் உறுதியாக உள்ளனர். வழக்கமான பாதையை மாற்றும் எண்ணம் இல்லை என்றார்.
-
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications