சட்டீஸ்கர்: நக்சல்கள் தாக்குதல்-6 போலீஸார் பலி
புதுடெல்லி: சட்டீஸ்கர் மாநிலத்தில் இன்று நக்சலைட் தீவிரவாதிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த 6 போலீஸார் கொல்லப்பட்டனர்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளை தேடும் பணியில் மத்திய ரிசர்வ் படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதில் நாராயண்பூர் உள்பட 5 மாவட்டங்களில் நகசலைட்டுகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் இன்று கோரா என்ற இடத்தில் இருந்து நாராயண்பூரை நோக்கி மத்திய ரிசர்வ் படை போலீஸார் ஜீப்பில் புறப்பட்டனர். நெடுஞ்சாலையில் வாகனம் சென்று கொண்டிருந்தபோது அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி பயங்கர சத்தத்துடன் வெடித்தது.
இதில் எஸ்ஐ, 4 கான்ஸ்டபிள்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி இறந்தனர். மற்றொரு போலீஸார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். தகவலறிந்த உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து நக்சலைட் தீவிரவாதிகளை தேடும் பணி தீவிரபடுத்தப்பட்டு உள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications