வைகை அணை நிரம்புகிறது-வெள்ள அபாய எச்சரிக்கை
{image-Vaigai Dam-250_29082008.jpg tamil.oneindia.com}மதுரை: மதுரை உள்ளிட்ட ஐந்து தென் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாய நீராதாரமாகவும் விளங்கும் வைகை அணை முழுக் கொள்ளளவை நெருங்கி விட்டது. இதையடுத்து முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் பெயருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் குடிநீர் மற்றும் விவசாயஆதாராமாக வைகை அணை விளங்குகிறது.
கடந்த 10 நாட்களாக வைகை அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளான ஆண்டிப்பட்டி, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வைகை அணையின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வந்தது.
மொத்தம் 71 அடியைக் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 66 அடியாக உயர்ந்துள்ளது. இதையடுத்து இன்று முதலாவது வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
அணைக்கு விநாடிக்கு 2000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து விநாடிக்கு 41 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
அணையின் நீர்மட்டம் 68.5 அடியாக உயர்ந்தவுடன் 2வது வெள்ளஅபாய எச்சரிக்கை விடப்படும். 69 அடியை எட்டியவுடன் 3வது அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணை திறக்கப்படும்.
எனவே ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications