ராமேஸ்வரம்-பெங்களூர், திருச்சி-திருவனந்தபுரம் அரசு பஸ்கள் அறிமுகம்
சென்னை: இன்று முதல் ராமேஸ்வரம்-பெங்களூர், திருச்சி-திருவனந்தபுரம், கடலூர்-பெங்களூர், சென்னை-கடம்புழா இடையே தமிழக அரசின் விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் அதிநவீன மிதவைப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
ராமேஸ்வரம்- பெங்களூர்:
ராமேஸ்வரத்தில் இருந்து ராமநாதபுரம், திருச்சி, சேலம், கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக பெங்களூருக்கு தினமும் இரு அதிநவீன மிதவை பஸ்கள் இயக்கப்படும். ராமேஸ்வரத்தில் இருந்து மாலை 4:30 மணிக்கும், பெங்களூரில் இருந்து மாலை 5:30 மணிக்கும் இந்த பஸ்கள் புறப்படும். 14 மணி 55 நிமிடங்கள் பயண நேரத்தைக் கொண்ட இந்த பஸ்சிற்கான கட்டணம் ரூ. 365 ஆகும்.
கடலூர்-பெங்களூர்:
மேலும் கடலூரில் இருந்து பண்ருட்டி, திருக்கோவிலூர், திருவண்ணாமலை, ஓசூர் வழியாகவும் பெங்களூருக்கு பஸ்கள் இயக்கப்படும். கடலூரில் இருந்து காலை 10:30 மணிக்கும், பெங்களூரில் இருந்து இரவு 10 மணிக்கும் இந்த பஸ் புறப்படும். ஏழு மணி நேரம் பயண நேரத்தைக் கொண்ட இந்த பஸ்சிற்கான கட்டணம் ரூ.200.
திருச்சி-திருவனந்தபுரம்:
அதே போல திருச்சியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், மார்த்தாண்டம் வழியாக தினமும் காலை 8 மணி, இரவு 7:30, 8:30, 9:30 ஆகிய நேரங்களில், 6 பஸ்கள் இயக்கப்படும். அதே நேரங்களில் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கும் பஸ்கள் இயக்கப்படும்.
சென்னை-கடம்புழா:
அதே போல சென்னையில் இருந்து விழுப்புரம், சேலம்,கோவை, பாலக்காடு வழியாக கேரள மாநிலம் காடாம்புழாவிற்கு தினசரி இரண்டு பஸ்கள் இயக்கப்படும். சென்னையில் இருந்து மாலை 4 மணிக்கும், காடாம்புழாவில் இருந்து மாலை 6 மணிக்கும் புறப்படும் இந்த பஸ்சிற்கான கட்டணம் ரூ.380.
இந்த புதிய வழித்தடங்கள் இன்று துவக்கி வைக்கப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications