புதுவை முதல்வராக செப். 1ம் தேதி வைத்திலிங்கம் பதவியேற்பு
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வராக வைத்திலிங்கம் செப்டம்பர் 1ம் தேதி பதவியேற்கவுள்ளார்.
புதுச்சேரி முதல்வராக இருந்து வந்த ரங்கசாமிக்கு எதிராக அவரது அமைசச்ரவையில் இடம் பெற்றிருந்த ஐந்து அமைச்சர்களும் போர்க்கொடி உயர்த்தினர்.
இதையடுத்து கட்சி எம்.எல்.ஏக்களின் ஆதரவை நிரூபிக்க ரங்கசாமிக்கு மேலிடம் உத்தரவிட்டது. அதன்படி கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், ரங்கசாமிக்கு அவர் தவிரமேலும் ஒருவரின் ஆதரவு மட்டுமே கிடைத்தது. மாறாக வைத்திலிங்கத்திற்கு அவர் தவிர மேலும் 5 பேரின் ஆதரவு இருந்தது.
இதையடுத்து ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சித் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டார். இதை ஏற்று அவர் நேற்று காலை தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து நடந்த சட்டசபை காங்கிரஸ் உறுப்பினர்கள் கூட்டத்தில் வைத்திலிங்கம், புதிய முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து மாலை ஐந்தே கால் மணிக்கு ஆளுநர் கோவிந்த் சிங் குர்ஜாரை வைத்திலிங்கம், கட்சி மேலிடப் பார்வையாளர்க கிருஷ்ணசாமியுடன் சென்று சந்தித்தார். அவரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரி கடிதம் வழங்கினார்.
மேலும், பாமகவின் ஆதரவுக் கடிதத்தை அக்கட்சித் தலைவர் பேராசிரியர் ராமதாஸும், சுயேச்சைகள் 3 பேரும் தங்களது ஆதரவுக் கடிதத்தை வழங்கினர்.
இதையடுத்து வைத்திலிங்கத்தை ஆட்சி அமைக்குமாறு ஆளுநர் கேட்டுக் கொண்டார்.
பின்னர் மாநில திமுகஅமைப்பாளர் ஆர்.வி.ஜானகிராமனை அவரது வீட்டில் வைத்திலிங்கமும் மற்றவர்களும் சந்தித்தனர். அப்போது திமுகவின் ஆதரவுக் கடிதத்தை அவர்களிடம் ஜானகிராமன் வழங்கினார்.
இதையடுத்து செப்டம்பர் 1ம்தேதி வைத்திலிங்கம் முதல்வராகப் பதவியேற்கிறார். அவருடன் ஐந்து அமைச்சர்களும் பதவியேற்கவுள்ளனர்.
ஏற்கனவே 1991ல் முதல்வரான வைத்திலிங்கம் 96 வரை அப்பதவியில் இருந்தவர். ரங்கசாமி அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வந்தார்.
பதவி விலகியுள்ள ரங்கசாமி இருமுறை முதல்வர் பதவி வகித்தவர். நேற்று பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நா தழு தழுக்க பேசினார் ரங்கசாமி. அவர் கூறுகையில், மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். காங்கிரஸ் கட்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்றார். பின்னர் தனக்குச் சொந்தமான அம்பாசடர் காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பினார் ரங்கசாமி.
கட்சிக்குள் பலத்த எதிர்ப்பை ரங்கசாமி சந்தித்துள்ள போதிலும், புதுச்சேரி மக்களிடையே அவருக்கு பெருத்த ஆதரவு உள்ளது. எளிமையான, யாரும் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக இருந்து வந்தார் ரங்கசாமி.
தனது மோட்டார் சைக்கிளில் சர்வ சாதாரணமாக புதுச்சேரியில் அவர் போவதை அவ்வப்போது பார்க்கலாம். சாலையோர டீக் கடைகளிலும் டீ குடித்து மக்களிடையே அவ்வப்போது பேசி குறைகளைக் கேட்டறிவார்.
தனது தட்டாஞ்சாவடி தொகுதியை எந்தக் குறையும் இல்லாத தொகுதியாகவும் மாற்றி வைத்துள்ளார் ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி விரைந்தார் வைத்திலிங்கம்:
இந்நிலையில் இன்று மதியம் திடீரென்று டெல்லி புறப்பட்டார் வைத்திலிங்கம். கட்சித் தலைவர் சோனியாவை சந்திக்க அவர் சென்றுள்ளதாக தெரிகிறது.
பதவி விலகியுள்ள ரங்கசாமி இருமுறை முதல்வர் பதவி வகித்தவர். நேற்று பதவியை ராஜினாமா செய்த பின்னர் ஆளுநர் மாளிகை வளாகத்தில் செய்தியாளர்களிடம் நா தழு தழுக்க பேசினார் ரங்கசாமி. அவர் கூறுகையில், மாநில வளர்ச்சிக்கு தொடர்ந்து பாடுபடுவேன். காங்கிரஸ் கட்சிக்கு முழு ஒத்துழைப்பு தருவேன் என்றார். பின்னர் தனக்குச் சொந்தமான அம்பாசடர் காரில் ஏறி வீட்டுக்குத் திரும்பினார் ரங்கசாமி.
கட்சிக்குள் பலத்த எதிர்ப்பை ரங்கசாமி சந்தித்துள்ள போதிலும், புதுச்சேரி மக்களிடையே அவருக்கு பெருத்த ஆதரவு உள்ளது. எளிமையான, யாரும் எளிதில் அணுகக்கூடிய ஒருவராக இருந்து வந்தார் ரங்கசாமி.
தனது மோட்டார் சைக்கிளில் சர்வ சாதாரணமாக புதுச்சேரியில் அவர் போவதை அவ்வப்போது பார்க்கலாம். சாலையோர டீக் கடைகளிலும் டீ குடித்து மக்களிடையே அவ்வப்போது பேசி குறைகளைக் கேட்டறிவார்.
தனது தட்டாஞ்சாவடி தொகுதியை எந்தக் குறையும் இல்லாத தொகுதியாகவும் மாற்றி வைத்துள்ளார் ரங்கசாமி என்பது குறிப்பிடத்தக்கது.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
அலையவிடும் ரங்கசாமி.. ஏக கடுப்பில் பாஜக எம்எல்ஏக்கள்.. இப்படி பண்ணிட்டாரே.. அமித் ஷா அப்செட்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!

Click it and Unblock the Notifications