ரூ.1க்கு கிலோ அரிசி: கருணாநிதிக்கு அரசியல் தலவர்கள் பாராட்டு

காவியம் படைத்த கருணாநிதி - வீரமணி:
திராவிட கழகத் தலைவர் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் இந்த அறிவிப்பு ஏழை எளிய அடித்தட்டு மக்களால் பெரிதும் வரவேற்கப்படும் என்பது உறுதி.
நான் படைக்கும் காவியங்கள், படைப்புகளில் முக்கியமானவை, ஏழை எளியவர்களின் கண்ணீரை துடைக்கும் செயல்கள்தான் என்று சில தினங்களுக்கு முன் முதல்வர் கருணாநிதி கூறினார். இப்படி ஒரு காவியம் படைத்ததற்கு நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.
போற்றுதலுக்குரியது - சுதர்சனம்:
சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், முதல்வரின் இந்த அறிவிப்பினால் தமிழகத்தில் 1 கோடியே 80 லட்சம் ஏழை எளிய மக்கள் பயன்பெறுவார்கள். இதனால் அரசுக்கு ஏற்படும் ரூ.400 கோடி இழப்பை பொருட்படுத்தாமல் ஏழைகளின் நலன் கருதி எடுத்துள்ள இந்த முடிவு போற்றுதலுக்குரியது.
முதல்வர் கருணாநிதிக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அண்ணாவின் உண்மை தம்பி - திருமாவளவன்:
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கூறுகையில், இந்த அறிவிப்பு திமுக அரசுக்கு மேலும் பெருமையை சேர்க்கும் என்பதில் சந்தேகமில்லை.
ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை அறிமுகப்படுத்திய அண்ணாவின் கனவை நனவாக்கும் வகையில் கிலோ அரிசி ரூ.1 என்ற திட்டத்தை நடைமுறைபடுத்தி இருப்பதன் மூலம் கருணாநிதி, அண்ணாவின் உண்மை தம்பி என்பதை காட்டுகிறது.
கடந்த 2006ல் ரூ.2க்கு கிலோ அரிசி திட்டத்தை முதல்வர் அறிமுகப்படுத்தினார். தற்போதைய இந்த திட்டத்தின் மூலம் மக்கள் இரட்டிப்பு பயன் அடைவார்கள். இந்த அறிவிப்புக்கு நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications