Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அரிசி: திசை திருப்பும் முயற்சி-வைகோ, சரத்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வரின் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டம் மக்களை ஏமாற்றுவதற்காகவும், ஓட்டு வங்கிகாகவும் அறிவிக்கப்பட்டு என்று வைகோ, சரத் ஆகியோர் கூறியுள்ளனர்.

இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ரேஷன் கடைகளில் விற்கப்படும் அரிசியை ரூ.2ல் இருந்து ரூ.1ஆக குறைத்துள்ளார் முதல்வர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ஒன்றுக்கு மளிகை பொருட்களை ரூ.500க்கு வாங்கிய ஏழை குடும்பத்தினர் இன்று அதே பொருட்களை ரூ.2,500க்கு வாங்க வேண்டிய அளவுக்கு விலைவாசி உயர்ந்துள்ளது.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. ஏழை நடுத்தரக் குடும்பங்களின் வீடு கட்டும் கனவு தகர்க்கப்பட்டுள்ளது. கம்பி, சிமெண்ட் ஆகியவற்றின் விலை நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளது.

கடந்த ஓராண்டாக ஒட்டுமொத்த தமிழகத்தையும் மின்துறை பாழ்படுத்திக் கொண்டிருக்கிறது. இவையெல்லாம் திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேட்டிற்கும் மக்கள் விரோதபோக்கிற்கும் உதாரணங்கள்.

ஒட்டுமொத்த நாட்டு மக்களும் குமுறி கொந்தளித்துபோய் இருக்கிற காலக்கட்டத்தில் அரிசி விலையை குறைத்திருக்கிறோம் என்பது நாட்டு மக்களை திசைதிருப்புவதற்காக செய்யப்பட்ட அறிவிப்பாகத்தான் உள்ளது. இது, திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைத் திருப்பும் முயற்சி.

இந்த அரிசியை பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதில்லை. மாறாக கோழித் தீவனமாகவே இந்த அரிசியை மக்கள் பயன்படுத்துகின்றனர். அண்டை மாநிலங்களுக்குக் கடத்தப்பட்டு, கூடுதல் ஆதாயம் பார்க்கவே இந்த விலை குறைப்பு பயன்படும். ஏழைகளை இது மகிழ்விக்காது. மக்களின் கோபத்தில் இருந்து ஆட்சியாளர்கள் தப்ப முடியாது என்று கூறியுள்ளார்.

தேர்தலுக்கான அறிவிப்பு...

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஏற்கனவே ரூ.2க்கு வழங்கப்படும் அரிசியின் தரம் குறித்தும், அது வெளி மாநிலங்களுக்கு கடத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. ரூ.1க்கு அரிசி என்ற இந்த அறிவிப்பினால் அரிசி கடத்தல் இன்னும் அதிகமாகும். தற்போது வழங்கப்படும் அரிசியின் தரத்தை விட இன் வழங்கப்படும் அரிசியின் தரம் உயர்ந்ததாக இருக்கும் என்று உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

அவரது இந்த விளக்கத்தின் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்ட அரிசி தரம் குறைந்தது என்கிற உண்மையை காட்டுகிறது. இதுவரை கூட்டணியில் அங்கம் வகித்த பாமக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி இருக்கும் சூழ்நிலையில், நாடாளுமன்ற தேர்தலை மனதில் கொண்டுதான் இந்த திடீர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மின் வெட்டு, விலைவாசி உயர்வு, உரத்தட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு, காவிரி நீர்ப்பிடிப்பு பிரச்சனை உள்பட பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் திமுக அரசு, மக்களை திசை திருப்புவதற்காக இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

குறைந்த தரம், கடத்தல் போன்ற விவகாரங்களை மீறி ஏழை மக்களுக்கு உண்மையிலேயே பயன்படும் வகையில் செயல்படுத்தப்பட்டால்தான் இத்திட்டத்தை வரவேற்க முடியும் என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+