விலைவாசி..தேர்தலில் எதிரோலிக்கும்: திருமா
நாகர்கோவில்: விலைவாசி உயர்வு வரும் நாடாளுமன்ற தேர்தலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவி்த்தார்.
நெல்லை மாவட்டம், நரிப்பாறையைச் சேர்ந்தவர் துரைசிங்கம். வழக்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட துரைசிங்கத்தை வடசேரி போலீசார் கொலை செய்துவிட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
துரைசிங்கம் கொலையில் சம்பந்தப்பட்ட போலீசார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:
ஒரிஸ்ஸாவில் கன்னியாஸ்திரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் வன்னையாக கண்டிக்கதக்கது. வன்முறையாளர்களை அடக்கி சுமூக நிலை ஏற்படுத்த அங்கு துணை ராணுவத்தை மத்திய அரசு அனுப்ப வேண்டும்.
தமிழகத்தில் மூன்றாவது அணி அமைய வாய்ப்பு இல்லை. ரூ.1க்கு அரிசி திட்டத்தை முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பால் தொடர் மின் வெட்டையும், விலைவாசி உயர்வையும் மக்கள் மறந்து விட மாட்டார்கள் என்றார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், டீசல் தட்டுபாடு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனைகள் வரும் பாராளுமன்ற தேர்தலில் மத்திய, மாநில அரசுகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும். இடதுசாரி கட்சிகள் அகில இந்திய நிலையையே பின்பற்றி வருகின்றன.
பாமக போன்றவை திமுக கூட்டணியில் தொடர வேண்டும். மின்வெட்டு, டீசல் தட்டுபாடால் மக்கள் கடு்மையாக பாதிக்கப்படுகிறார்கள். எனவே இதை இப்படியே விட்டுவிடாமல் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
-
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
சமூக நீதி முற்போக்குக் கூட்டணி.. கொளுத்தி போட்ட காங்.! விசிக நிலைபாடு என்ன? திருமாவளவன் விளக்கம் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
அண்ணாமலைக்கும் அடைக்கலம் தரும் திருமா.. வாழ்த்து சொன்ன கையோடு அடுத்து சொன்ன மேட்டரை பாருங்க -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு












Click it and Unblock the Notifications