ஜனவரி 1ல் இலவச வேட்டி, சேலை வினியோகம்
ஈரோடு: அரசின் இலவச வேட்டி மற்றும் சேலைகளை வரும் ஜனவரி முதல் தேதி அன்று முதல்வர் கருணாநிதி வழங்குவார் என்று கைத்தறித்துறை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் தெரிவித்தார்.
ஈரோட்டு கூட்டுறவு சங்களில் தயாரிக்கப்பட்டு வரும் இலவச வேட்டி சேலைகளை அமைச்சர் சாத்தூர் ராமசந்திரன் ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நடப்பு நிதியாண்டில் இலவச வேட்டி, சேலை வழங்குவதற்காக ரூ.256 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தலா ஒரு கோடியே 59 லட்சம் வேட்டி மற்றும் சேலைகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்தப் பணி நவம்பர் மாதம் முடிவடைந்துவிடும். தற்போது அதில் 50 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டது. டிசம்பர் 15ம் தேதிக்குள் அனைத்து மாவட்டங்களுக்கும் இலவச வேட்டி சேலைகள் அனுப்பி வைக்கப்படும்.
ஜனவரி முதல் தேதி அன்று இலவச வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி தொடங்கி வைப்பார். மின் தட்டுப்பாட்டு காரணமாக உற்பத்தி பாதிக்கப்படாமல் இருக்க தறிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, உற்பத்தியை பெருக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலவச வேட்டி, சேலைகளில் மாறுதல் தேவை என்று பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளது. இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முதல் புதிய டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications