வாடகை-கடைகளை சீல் வைத்த மதுரை கமிஷ்னர்
மதுரை: மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் மாநகராட்சி கட்டிடத்தில் கடை வாடகை தராமல் கால தாமதம் செய்து வந்த கடைகளை மாநகராட்சி கமிஷனர் அதிரடியாக பூட்டி சீல் வைத்தார்.
மதுரை மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் 150 க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மாநகராட்சிக்கு சொந்தமான இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பல மாதங்களாக வாடகை செலுத்தவில்லை.
வாடகை செலுத்தக் கோரி மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
இந் நிலையில் மதுரை மாநகராட்சி கமிஷனர் தினகரன், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் படை சூழ மாட்டுத்தாவணி பஸ் நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு வாடகை பாக்கி வைத்திருந்த சுமார் 20 கடைகளை அதிரடியாக பூட்டி சீல் வைத்தார்.
இதனால், பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகளை சார்ந்தவர்கள் உடனடியாக தங்களது வாடகை பாக்கியான ரூ. 6. லட்சத்தை மாநகராட்சிக்கு செலுத்தினர். இதையடுத்து கடைகளைத் திறந்துவிட்டார் கமிஷ்னர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications