மின் தடை-2 வயது குழந்தையிடம் பலாத்காரம்!!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் அருகே மின் தடையை பயன்படுத்தி இரண்டு வயது குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மகா கொடூரமான சம்பம் திண்டிவனம் காவேரிபாகம் பகுதியில் நடந்தது. இந்தப் பகுதியைச் சேர்ந்த பழனி-சூர்யா தம்பதியின் இரண்டு வயது மகள் சுமிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

குழந்தை நேற்றிரவு வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது மின் தடை ஏற்பட்டது.

திடீரென குழந்தை அழும் சத்தம் கேட்டு பெற்றோர் ஓடி வந்து பார்த்தபோது அதன் ஆடை கிழிக்கப்பட்டு, உடலில் நகக்கீறல்கள் இருந்தன. இருட்டில் யாரோ ஒருவன் குழந்தையை பலாத்காரம் செய்துவிட்டு ஓடிவிட்டான்.

இதைப் பார்த்து பதறிப் போன பெற்றோர் குழந்தையை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சம்பவம் குறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் செய்ய சென்றனர்.

ஆனால், மகா கொடுமையாக வழக்குப் பதிவு செய்ய போலீசார் மறுத்தனர். இதனால் ஆவேசம் அடைந்த கிராம மக்கள் நள்ளிரவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஓடி வந்த திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வழக்குப் பதிவு செய்தார். இதனையடுத்து சாலை மறியல் வாபஸ் பெறப்பட்டது.

குழந்தையிடம் கொடுமையாக நடந்து கொண்ட அந்த கயவனுக்கு வலை வீசப்பட்டுள்ளது. அவன் அதே பகுதியைச் சேர்ந்தவனாக இருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+