'அணு': பாஜக-இடதுசாரிகள் போர்க்கொடி
டெல்லி: இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் மன்மோகன் சிங்கின் முயற்சிகள் அம்பலமாகி விட்டதாக பாஜக மற்றும் இடதுசாரிகள் மீண்டும் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.
இந்திய-அமெரிக்க அணு ஒப்பந்தம் குறித்து அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் பெர்மன் வெளியிட்டுள்ள கடிதம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக மூத்த தலைவரும் முன்னாள் நிதியமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா கூறுகையில், மன்மோகன் சிங் அரசின் மோசடித்தனம் அம்பலமாகி விட்டது. இனியும் இந்த அரசு ஒரு நாள் கூட பதவியில் நீடிக்கக் கூடாது. அதற்கான தகுதியை இழந்து விட்டது.
அணு ஆயுத சோதனைக்கு ஒரு தடையும் இல்ைல என்று பிரதமர் தெரிவித்து வந்தார். ஆனால் புஷ் அரசு அதை மறுத்து கடிதம் வெளியிட்டிருப்பது மன்மோகன் சிங் ஒரு பொய்யர் என்பதை நிரூபித்து விட்டது.
இந்தக் கடிதம் எழுதப்பட்ட 8 மாதங்களாகி விட்டன. இதுகுறித்து பிரதமருக்கும் தெரியும். இருப்பினும் லோக்சபாவில் இந்தக் கடிதத்திற்கு முற்றிலும் மாறாக அவர் பேசியது துரதிர்ஷ்டவசமானது என்றார்.
இடதுசாரிகள்:
இது குறித்து இடதுசாரி கட்சித் தலைவர்கள் கூறுகையில், அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக நாங்கள் எடுத்த நிலையை சிலர் விமர்சித்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்தது.
ஹைட் சட்டம் இதில் வரவே இல்லை என்று இந்திய அரசு கூறி வந்தது. ஆனால் அந்த சட்டத்தின் அடிப்படையில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக இப்போது அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அணு ஆயுத சோதனை நடத்த தடை இல்லை என்று பிரதமர் கூறினார். ஆனால் நடத்தினால் உடனடியாக ஒப்பந்தம் ரத்தாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்திய நாட்டை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் முயற்சியைக் கண்டித்து நாங்கள் குரல் கொடுத்தது சரியானதுதான் என்பதை நிரூபிப்பதாக இந்தக் கடிதம் அமைந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
'கடிதம் வெளியானது இந்தியாவுக்கு நல்லதே':
வியன்னாவில் இன்று என்.எஸ்.ஜி கூட்டம் தொடங்கவுள்ள நிலையில், அமெரிக்க அரசு எழுதிய கடிதம் வெளியாகியுள்ள விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், இந்தக் கடிதம் என்.எஸ்.ஜி. கூட்டத்தில் இந்தியாவுக்கு சாதகமான நிலையையே உருவாக்கும் என சர்வதேச விவகார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா அணு ஆயுத சோதனை நடத்துவதை அமெரிக்கா கட்டுப்படுத்தும் என இந்தக் கடிதம் கூறுவதால், அது அணு ஆயுத பரவலை எதிர்க்கும் என்எஸ்ஜி நாடுகள் இந்தியாவுக்கு எதிரான நிலையை எடுப்பதை தவிர்க்க உதவும் என்கின்றனர்.
அணு ஒப்பந்தம் குறித்த ஆய்வு கட்டுரை:
புத்தர் சிரித்தாலும் சிரித்தார்...
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு












Click it and Unblock the Notifications