பீகார் வெள்ள பகுதிகளில் 'லாலு ஹோட்டல்'!
டெல்லி: பீகார் மாநிலம் மாதேபுரா பகுதியில் வெள்ளப் பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு இலவச உணவு வழங்குவதற்காக ராஷ்டிரிய ஜனதாதள கட்சியினர் லாலு பிரசாத் யாதவ் பெயரில், லாலு போஜனாலயா (லாலு உணவகம்) என்ற உணவகங்களைத் திறந்துள்ளனர்.
பீகாரில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வெள்ளத்தால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பல மாவட்டங்களில் வெள்ளத்தில் மிதக்கின்றன.
நிவாரணப் பணிகளில் ஒரு பக்கம் அரசும், பிற கட்சிகளும் ஈடுபட்டுள்ள நிலையில் வெள்ளத்தில் அரசியலைக் கலந்து யார் இதற்கு காரணம் என்ற அரசியல் சண்டையும் நடந்து வருகிறது.
இந்த நிலையில், வெள்ளம் பாதித்த மாதேபுரா பகுதியில், ராஷ்டிரிய ஜனதாதள கட்சியினர், லாலு பெயரில் உணவகங்களைத் திறந்துள்ளனர். மொத்தம் 5 இடங்களில் இந்த லாலு போஜனாலயா திறக்கப்பட்டுள்ளன.
இங்கு வெள்ளப் பாதிப்புக்கு ஆளான மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து வயிறு முட்டச் சாப்பிட்டுச் செல்லலாம் என லாலு கட்சியினர் அறிவித்துள்ளனர்.
இங்கு அளவுச் சாப்பாடே கிடையாது. எல்லாமே அன் லிமிட்டெட்தான் என்று லாலு பிரசாத் யாதவ் செய்தியாளர்களைக் கூட்டி அறிவித்துள்ளார்.
இங்கு கிச்சடி, சாதம், ரொட்டி, காய்கறிகள் என சகலமும் கிடைக்கும் எனவும், வருகிறவர்களுக்கு இல்லை என்று கூறாமல் சாப்பாடு தரப்படும் எனவும் லாலு தெரிவித்தார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications