'என்கெளன்டர்': சிபிஐ விசாரணை கோரி வழக்கு- குஜராத்துக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
டெல்லி: குஜராத் போலீஸார் 2002ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை நடத்திய போலி என்கெளன்டர்கள் குறித்து சிபிஐ மூலம் விரிவான விசாரணை நடத்த கோரி பிரபல திரைப்பட பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ஜாவேத் அக்தர் தாக்கல் செய்திருந்த மனுவில், குஜராத்தில் இந்த காலகட்டத்தில் 21 போலி என்கெளன்டர்கள் நடந்துள்ளதாக மாநில முதல்வர் நரேந்திர மோடியே குஜராத் சட்டசபையில் ஒப்புக் கொண்டுள்ளார்.
எனவே இந்த போலி என்கெளன்டர்கள் குறித்து சிபிஐ மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் சமீர் கான் என்பவரையும் குஜராத் போலீஸார் போலி என்கெளன்டர் மூலம் கொன்றுள்ளனர். அதுகுறித்தும் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் தருண் சாட்டர்ஜி, அப்தாப் ஆலம் ஆகியோர் முன்னிைலயில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி குஜராத் அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். வழக்கு விசாரணை நவம்பர் 2வது வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications