புலிகள் பயங்கர தாக்குதல்-75 ராணுவ வீரர்கள் பலி
வவுனியா: இலங்கையின் வட பகுதியில் உள்ள கிளிநொச்சி அருகே நடந்த கடும் சண்டையில் 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 50க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயமடைந்ததாகவும் விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்ட வீரர்கள் உடல்களையும் அவர்கள் புகைப்படங்கள் மூலம் வெளியிட்டுள்ளனர்.
இலங்கையின் வட பகுதியில் கிளிநொச்சியைச் சுற்றிலும் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப் புலிகளின் முக்கிய தளமாக கருதப்படும் மல்லாவி என்ற இடத்தைப் பிடித்து விட்டதாக ராணுவம் கூறியிருந்தது. ஆனால் இதை புலிகள் மறுத்திருந்தனர்.
நாச்சிகுடாவில் 45 பேர் பலி:
இந்த நிலையில், நாச்சிக்குடா மற்றும் வன்னேரி அக்காராயன் ஆகிய பகுதிகளில் ராணுவத்திற்குப் பலத்த சேதம் ஏற்பட்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரு தாக்குதல்களிலும் 70க்கும் மேற்பட்ட ராணுவத்தினர்கொல்லப்பட்டுள்ளனர்.
நாச்சிகுடா பகுதியில் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ராணுவம் பீரங்கித் தாக்குதலை மேற்கொண்டது. ஆனால் அதை முறியடித்து விடுதலைப் புலிகள் கொரில்லாத் தாக்குதல் மேற்கொண்டனர்.
இந்த அதிரடித் தாக்குதலில் 45க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ராணுவத்தினர் வைத்திருந்த பெருமளவிலான ஆயுதங்களையும் புலிகள் பறிமுதல் செய்தனர்.
வன்னேரியில் 30 பேர் பலி:
வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் இலங்கை ராணுவமந் பலமுனைத் தாக்குதலை மேற்கொண்டது. இந்த தாக்குதல்களை விடுதலைப் புலிகள் தடுத்து பதிலடி தாக்குதலில் இறங்கினர்.
இங்கு நடந்த கடும் சண்டையில், 30க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
கொல்லப்பட்ட வீரர்களின் உடல்களை புலிகள் கைப்பற்றியுள்ளனர். ராணுவத்தினரின் ஆயுதங்களும் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
வன்னேரிக்கும் அக்கராயனுக்கும் இடையில் 8 ஆம், 9 ஆம், 10 ஆம் கட்டைப் பகுதிகளில் இரண்டு முனைகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 5 மணி தொடங்கி மாலை 6 மணி வரை புலிகளும், ராணுவத்தினரும் மோதினர்.
தங்களது தாக்குதலை சமாளிக்க முடியாமல் ராணுவம் பின் வாங்கிச் சென்று விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications