டீசல் தட்டுப்பாடு-லாரி உரிமையாளர்கள் எச்சரிக்கை!
நாமக்கல்: அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் லாரிகளுக்கு டீசல் கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். மாறாக இதே போன்ற தட்டுப்பாடு நீடித்தால் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய நேரிடும் என்று லாரி உரிமையாளர்கள் சங்கம் தமிழக முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அதன் தலைவர் முனிரத்தினம் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,
தமிழகத்தில் சுமார் இரண்டு லட்சத்து எண்பதாயிரம் லாரிகள் இயங்கி வருகின்றன. சமீப காலமாக கடுமையான டீசல் தட்டுபாடு நிலவி வருவதால் லாரி உரிமையாளர்கள் கடும் பாதிப்படைந்துள்ளனர்.
தமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால் தொழிற்சாலை நிறுவனங்கள் மற்றும் சாப்ட்வேர் நிறுவனங்களில் டீசலை அதிகமாக பயன்படுத்துகிறார்கள் என்கின்றனர். பெட்ரோல் பங்குகளில் பேரல்கள் மூலம் டீசலை தொழிற்சாலைகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் தான் அதிகமாக டீசல் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது.
அனைத்து பெட்ரோல் பங்குகளிலும் லாரிகளுக்கு தமிழக அரசு டீசல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். மாறாக இதே நிலை நீடித்தால் விரைவில் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய நேரிடும் என்று கடிதத்தில் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications