மாப்பிள்ளை ஓட்டம்-கல்யாணம் நின்றது
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தாலி கட்டும் நாளில் மணமகன் ஓட்டம் எடுத்தால் கல்யாணம் நின்று போனது.
தூத்துக்குடி மாவட்டம், குளியங்குளத்தை சேர்ந்தவர் அருள்ஜோதி (28). நெடுஞ்சாலைத்துறை ஊழியராக பணியாற்றி வருகிறார்.
இவருக்கும் கிழநம்பிபுரத்தை சேர்ந்த முத்துலட்சுமி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
இவர்களது திருமணம், கோவில்பட்டி செண்பகவள்ளி அம்மன் கோயிலில் நேற்று (செப்டம்பர் 3 ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது.
திருணத்தை ஒட்டி பெண் வீட்டார் அதிகாலையிலேயே கோவிலுக்கு வந்து விட்டனர். ஆனால், மணமகன் வீட்டார் யாரும் வரவில்லை. குழப்பமடைந்த பெண் வீட்டார் விசாரித்த போது, இந்த திருமணத்தில் மணமகனுக்கு விருப்பம் இல்லை என தெரியவந்தது.
மேலும் முகூர்த்த நேரத்தில் தன்னை கட்டாய தாலி கட்ட வைத்து விடுவார்கள் என்று கருதி மணமகன் வீட்டை விட்டு ஓடி விட்டாராம்.
தகவல் அறிந்த மணமகள் கதறி கண்ணீர் விட்டு அழுதார். அவரை உறவினர்கள் சமாதானம் செய்தனர். பின்னர் கண்ணீரை துடைத்துக் கொண்டு எட்டையபுரம் காவல் நிலையம் சென்று போலீஸில் புகார் கொடுத்தார் முத்துலட்சுமி.
தன் பேரில் மணமகன் அருள்ஜோதி மற்றும் அவரது பெற்றோர்கள், மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications