அரசு விரைவு போக்குவரத்துக் கழக பஸ்களின் வேகம் குறைப்பு
நெல்லை: பெட்ரோல்-டீசல் தட்டுபாடு மற்றும் விலை உயர்வை சமாளிக்க அரசு போக்குரவத்து கழகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
டீசலை மிச்சப்படுத்தும் வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களின் வேகம் 60 கிலோ மீட்டராக குறைக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் செல்ல இயலாத வகையில் என்ஜின்களில் ஸ்பீட் லாக் பொறுத்தப்பட்டுள்ளது.
எனவே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் அரசு விரைவு பஸ்களை டிரைவர்களால் இயக்க முடியாது.
முன்பு ஒரு லிட்டர் டீசலுக்கு அரசு விரைவு பஸ்கள் சாரசரியாக 4.45 கிலோ மீட்டர் தூரம் சென்றன. தற்போது இந்த வேகக் கட்டுப்பாட்டால் அது 4.85 கிலோ மீட்டராக அதிகரித்துள்ளதாம்.
இதை லிட்டருக்கு 5 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையில் உயர்த்த பஸ்சை குறிப்பிட்ட வேகத்தில் இயக்குமாறு டிரைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை முதல் சென்னைக்கு தனியார் ஆம்னி பஸ்களில் பயண நேரம் 12 மணி நேரம்தான். ஆனால் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் அல்ட்ரா டீலக்ஸ் பேரூந்துகளின் பயண நேரமோ தற்போது 16 மணி நேரம் வரை ஆகிறது.
இந்நிலையில் டீசல் சேமிப்பு என்ற பெயரில் மேலும் பேருந்தின் வேகத்தை குறைப்பதால் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் ஏற்கனவே தனியார் பஸ்களிடம் பயணிகளை இழந்து வருவது மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது.
அதிவிரைவு பேருந்து என்று பஸ்சின் போர்டில் மட்டுமே உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications