பிரதமருடன் டாடா சந்திப்பு-பேச்சுக்கு மம்தா ரெடி
டெல்லி: சிங்கூரிலிருந்து இடம் பெயருவது குறித்த திட்டத்தில் இருக்கும் டாடா குழுமத் தலைவர் ரத்தன் டாடா பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் சிங்கூரில், டாடாவின் நானா தொழிற்சாலை அருகே திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தொடர் தர்ணா நடத்தி வருகின்றனர். இதனால் தனது தொழிற்சாலையை இழுத்து மூடி விட்டது டாடா. மேலும் சிங்கூரை விட்டு இடம் பெயரப் போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் நானோ தொழிற்சாலையின் எதிர்காலம் கேள்விக்குறியாகவும், குழப்பமாகவும் மாறியுள்ளது.
டாடா நிறுவனம் சிங்கூரை விட்டு போகப் போகிறது என்று அறிவித்தவுடன் அப் பகுதி மக்களிடையே திட்டத்தை எதிர்த்த மம்தா பானர்ஜி மீது கடும் அதிருப்தி பரவியுள்ளது.
400 ஏக்கர் நிலத்துக்காக ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை மம்தா இழக்கச் செய்வதாக எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, மம்தா பானர்ஜியும் இறங்கி வந்துள்ளார். டாடாவை நான் வெளியேறச் சொல்லவே இல்லை. பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், பிரதமர் மன்மோகன் சிங்கை, டாடா குழுத் தலைவர் ரத்தன் டாடா சந்தித்துப் பேசியுள்ளார். டாடாவுடன், ஆட்டோமொபைல் நிறுவன அதிபர்களான ராகுல் பஜாஜ், பிரிஜ் மோகன் முஞ்சால், ரவி கந்த் ஆகியோரும் பிரதமரை சந்தித்தனர்.
கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படவில்லை. டாடாவும் இதுதொடர்பாக விளக்கவில்லை. இருப்பினும் திட்டமிட்டபடி அக்டோபர் மாதம் நானோ கார் சாலைகளில் ஓடும் என்பதை மட்டும் அவர் உறுதியாகத் கெதரிவித்தார்.
டாடா கூறுகையில், நானோவை திட்டமிட்டபடி ஓட விடுவோம். அதில் உறுதியாக இருக்கிறோம். அதற்கேற்ற வழிகளை தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறோம் என்றார்.
மம்தா மற்றும் போராட்டங்களுக்கு எதிராக டாடா கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இதனால் டாடா தரப்பும் இந்த விஷயத்தில் இறங்கி வர முயல்வதாகத் தெரிகிறது.
பேச்சு நடத்த மம்தா சம்மதம்:
இந் நிலையில் பிரச்சனையை சுமூகமாகத் தீர்க்க மேற்கு வங்க ஆளுநர் கோபால் கிருஷ்ண காந்தி இரு தரப்புடனும் தொடர்ந்து பேச்சு நடத்தி வருகிறார்.
அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணும்படி தலைவர் மம்தா பானர்ஜிக்கு சில தினங்களுக்கு முன் அவர் கடிதம் எழுதினார். இதையேற்று பேச்சுவார்த்தைக்கு மம்தா சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து இன்று அரசுக்கும், மம்தாவுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
ஆனால்... ஒத்திவைப்பு:
ஆனால், காலை நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை அரசின் வேண்டுகோளையடுத்து மாலைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தை ஒத்தி வைக்கப்பட்டதற்கு மம்தாவும் எதிர்க் கட்சிகளுமே காரணம் என முதல்வர் புத்ததேவ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், முதலில் சிங்கூரில் சாலை மறியலை கைவிட வேண்டும். அதன் பின்னர் பேச்சை தொடங்கலாம் என்று கூறினோம். ஆனால், அதை எதிர்க் கட்சிகள் ஏற்கவில்லை. இந்த சூழலில் பேச்சைத் தொடங்குவது சரியாக இருக்காது என்பதால் தான் அது ஒத்தி வைக்கப்பட்டது என்றார்.
ஆனால், சாலை மறியலில் தனது கட்சியினர் ஈடுபடவில்லை என மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
டாடா குழுமத்தில் வெடித்த பிரச்சனை.. சந்திரசேகரனுக்கு வேட்டு வைக்கும் நோயல் டாடா! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications