விஎச்பி யாத்திரை தடுக்கப்படும்: ஒரிஸ்ஸா அரசு
டெல்லி: நக்ஸலைட்டுகளால் கொலை செய்யப்பட்ட விஎச்பி தலைவரின் அஸ்தியுடன் அந்த அமைப்பு நடத்த உள்ள யாத்திரை தடுத்த நிறுத்தப்படும் என்று ஒரிஸ்ஸா அரசு உச்சநீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
ஒரிஸ்ஸா மாநிலம் கந்த்மால் மாவட்டத்தில் உள்ள துமுடிபந்த் ஆஸ்ரமத்தில் கடந்த 23ம் தேதி அன்று கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்கள் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினர். அப்போது அங்கு வந்த 50க்கும் மேற்பட்ட நக்ஸலைட்டுகள் திடீரென்று துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் விஎச்பி தலைவர் லக்ஷ்மானந்தா சரஸ்வதி (85), உள்பட 6 பேர் பரிதாபமாக இறந்தனர். இதையடுத்து விஎச்பி, பஜ்ரங் தள் ஆகியவை கிருஸ்துவர்களுக்கு எதிராக வெறியாட்டம் போட்டன. இதில் 3 பேர் கொலையாயினர். பல சர்ச்சுகள் எரிக்கப்பட்டன. ஏராளமான கிருஸ்துவர்கள் தாக்கப்பட்டனர்.
இந் நிலையில் லக்ஷ்மானந்தா சரஸ்வதியின் அஸ்தியோடு வரும் 7ம் தேதி மாநிலம் தழுவிய யாத்திரை நடத்தப்படும் என்று விஎச்பியின் பொதுச் செயலாளர் பிரவீன் தொக்காடியா அறிவித்துள்ளார்.
இந்த இதனால் அங்கு மேலும் பதட்டம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதிகள் சதாசிவம், ஜே.எம்.பாஞ்சல் ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஒரிஸ்ஸா மாநில அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால் ஆஜராகி வாதாடினார். யாத்திரையை தடுக்கும் முயற்சிகளை அரசு முழு வீச்சில் மேற்கொள்ளும்.
கந்த்மால் மாவட்டத்தில் விஎச்பியினரின் நடவடிக்கைகள் கண்காணிக்கும் வகையிலும், அங்கு சட்டம் ஒழுங்கை காக்கும் வகையிலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊர்வலத்தை தடுத்து நிறுத்த தேவையான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது என்று உறுதியளித்தார்.
ஒரிஸ்ஸாவில் பாஜக ஆதரவோடு பிஜூ ஜனதா தளத்தின் சார்பில் நவீன் பட்நாயக் ஆட்சியில் இருப்பது குறி்ப்பிடத்தக்கது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications